40 மாடி இரட்டை கோபுரத்தை இடிக்க கோர்ட் உத்தரவு

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 'சூப்பர்டெக்' என்ற நிறுவனம் நொய்டா நகரில் 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. முன்பணம்'அபெக்ஸ், சியானி' என்ற இந்த இரு
 40 மாடி இரட்டை கோபுரத்தை இடிக்க கோர்ட் உத்தரவு

புதுடில்லி:உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 'சூப்பர்டெக்' என்ற நிறுவனம் நொய்டா நகரில் 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. முன்பணம்'அபெக்ஸ், சியானி' என்ற இந்த இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.

இந்நிலையில், எமரால்டு கோர்ட் குடியிருப்போர் நலச் சங்கம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சூப்பர்டெக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. அதில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், பொது பயன்பாட்டிற்கான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அந்த கட்டடங்களில் போதிய காற்று வசதி, வெளிச்சம் ஆகியவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒப்புதல்நொய்டா பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் மலிந்துள்ளது. கடந்த 2009ல் இந்த ஆணையம் சட்ட விரோத மாக சூப்பர்டெக் நிறுவனத்தின் கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, கட்டடத்தின் அசல் வரைபடத்தை வீடு வாங்க முன்பதிவு செய்தோருக்கு தர மறுத்துள்ளது. அலகாபாத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான், அந்த வரைபடம் தரப்பட்டுள்ளது. விதிகளை மீறி, பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுஉள்ளது.

அத்துடன், அசல் வரைபடத்தை காண்பித்து வீடு வாங்குவோரின் ஒப்புதலை பெற, நிறுவனம் தவறிவிட்டது.எனவே விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட வேண்டும். அத்துடன், சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-செப்-202110:56:39 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மக்களே புரிந்து கொள்ளுங்கள். நேர் வழி நல்லதை தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X