ஜாலியன்வாலா பாக் சீரமைப்பு ராகுல் எதிர்ப்பு:அமரீந்தர் வரவேற்பு

Updated : செப் 02, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (12+ 5)
Share
Advertisement
புதுடில்லி:'ஜாலியன்வாலா பாக் நினைவிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் வாயிலாக, தியாகிகள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.போராட்டம்சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் அமல்படுத்திய ரவுலட் சட்டத்தை எதிர்த்து 1919ல் ஆயிரக்கணக்கானோர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன்வாலா பாக்கில் போராட்டத்தில்
ஜாலியன்வாலா பாக் சீரமைப்பு ராகுல் எதிர்ப்பு , அமரீந்தர் வரவேற்பு

புதுடில்லி:'ஜாலியன்வாலா பாக் நினைவிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் வாயிலாக, தியாகிகள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.


போராட்டம்

சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் அமல்படுத்திய ரவுலட் சட்டத்தை எதிர்த்து 1919ல் ஆயிரக்கணக்கானோர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன்வாலா பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இடம் ஜாலின்வாலா பாக் நினைவிடமாக பாதுகாக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை மறுசீரமைப்பு செய்து நாட்டு மக்களுக்கு சமீபத்தில் அர்ப்பணித்தது.'மறுசீரமைப்பு என்ற பெயரில் வரலாற்றை அழிக்கும் பணியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது' என, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்., - எம்.பி., ராகுல் 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:தியாகத்தின் உண்மையான அர்த்தத்தை அறியாத நபர்களால் மட்டுமே ஜாலியன்வாலா பாக் சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு இப்படிப்பட்ட ஓர் அவமானத்தை இழைக்க முடியும்.


கொடூர செயல்

நான் ஒரு தியாகியின் மகன். என்னால் இந்த அவமானத்தை ஒருபோதும் பொறுக்க முடியாது. இந்த கொடூர செயலுக்கு நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். ஜாலியன்வாலா பாக் மறுசீரமைப்பு பணிகள் சிறப்பாக இருப்பதாக பஞ்சாப் முதல்வரும் காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
01-செப்-202115:24:45 IST Report Abuse
திரு.திருராம் ஆயிரம் தியாகிகள் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் சரித்திரத்தில் உள்ளது. 15000 அப்பாவிகள் கொல்லப்பட்ட நவகாளி சம்பவம் ஏன் சரித்திரத்தில் இல்லை?????
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
01-செப்-202111:51:29 IST Report Abuse
krishnamurthy இவனது அப்பா எந்த விதத்தில் தியாகி என்று இவன் விளக்கட்டும்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
01-செப்-202114:28:17 IST Report Abuse
pradeesh parthasarathyஇவனது அப்பாவும் , இவனது தாத்தாவும், பாட்டியும் தியாகிகள் தான் ...பிஜேபி தலைவர்கள் எத்ததனை பேர் தேசத்தத்திற்காக உயிர் துறந்தனர் என்று சொல்ல முடியுமா ..?...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
01-செப்-202116:46:50 IST Report Abuse
sankarஇவங்க அப்பாவும் படியும் தியாகித்தான் . அதுக்கு வேணா தியாகி பென்ஷன் வாங்கிக்க சொல்லுங்க . காந்தி படேல் சுபாஷ் இவங்க குடும்பம் யாரவது பதவியில் இருக்காங்களா . யோசிங்க பாஸ்...
Rate this:
Indian - kailasapuram,இந்தியா
01-செப்-202118:49:52 IST Report Abuse
Indian கொஞ்சமாவது தனி நபர் மரியாதை கொடுத்து பேசுங்கப்பா . .....
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
01-செப்-202111:24:01 IST Report Abuse
M S RAGHUNATHAN என்னது ராஜீவ் த்யாகியா? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, ராகுல் புளுகு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X