ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ., - எம்.பி., கடிதம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஐதராபாத்:'ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் உத்தரவிட வேண்டும்' என, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., ஆனந்த பாஸ்கர் ரபோலு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது' என, லோக்சபாவில் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., ஆனந்த பாஸ்கர் ரபோலு, பிரதமர்
 ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ., - எம்.பி., கடிதம்

ஐதராபாத்:'ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் உத்தரவிட வேண்டும்' என, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., ஆனந்த பாஸ்கர் ரபோலு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது' என, லோக்சபாவில் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., ஆனந்த பாஸ்கர் ரபோலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதன் விபரம்:ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, இந்திய சமூகத்தை மிகவும் வெளிப்படைத் தன்மை உடையதாக மாற்றவும், நடைமுறைக்கேற்ற சூழலை உருவாக்கவும் பிரதமரின் விரைவான கவனத்தை இந்த விவகாரத்தில் கோருகிறேன். இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான பார்லிமென்ட் குழு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பரிந்துரைத்துள்ளது. மத்திய சமூக நீதித் துறை மற்றும் உள்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் உடன்படுகின்றன.

எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தாங்கள் அளிக்கும் ஒப்புதல் புதிய வரலாற்றை படைக்கும். தாங்கள் பிறந்த தினமான செப்., 17 அன்று மக்களுக்கான பிறந்த நாள் பரிசாக இந்த அறிவிப்பை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X