சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விபத்தில் 12 பேர் பலிஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் நாகவுர் மாவட்ட நெடுஞ்சாலையில் நேற்று பயணியர் வாகனம் -- லாரி மோதின. விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 12 பேர் பலியாயினர்; ஆறு பேர் காயமடைந்தனர். விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்திவிட்டு சொந்த ஊர் திரும்பும்போது விபத்தில் சிக்கியதும்
 சில வரி செய்திகள்...: இந்தியா

விபத்தில் 12 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் நாகவுர் மாவட்ட நெடுஞ்சாலையில் நேற்று பயணியர் வாகனம் -- லாரி மோதின. விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 12 பேர் பலியாயினர்; ஆறு பேர் காயமடைந்தனர். விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்திவிட்டு சொந்த ஊர் திரும்பும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

காத்திருப்பில் போலீஸ் அதிகாரி

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மூன்று மாதங்களுக்கு முன் மனைவியை 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்த கணவர், மனைவியிடம் இருந்த 18 மாத குழந்தையையும் பறித்துச் சென்றார். இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே மனைவியின் ஆபாச 'வீடியோ'வை கணவர் இணையத்தில் வெளியிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 'வீடியோ' வெளியிட்டார். பின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது வீடியோவின் எதிரொலியாக, அவர் புகார் அளித்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தீபக் சதுர்வேதி நேற்று கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார்.

மும்பையில் மழை: நிலச்சரிவு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தேரி, பரேல் உட்பட தாழ்வான பகுதியில் வெள்ளம் தேங்கி உள்ளது. மும்பையின் அசல்பா பகுதியில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிலர் காயமடைந்தனர்.

இயக்குனரிடம் விசாரணை

ஐதராபாத்: தெலுங்கானாவில் 2017ல் நடந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சிக்கினர். போதைப்பொருள் வழக்குடன் தொடர்புடைய பண மோசடி குறித்து, அமலாக்கத் துறையினர் விசாரிக்கின்றனர். இதற்காக தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகநாத். ஐதராபாத் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார்.

மழைக்கு 7 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. விகாராபாதில் திருமண வரவேற்பு முடித்து மணமக்கள் நவாஸ் ரெட்டி, பிரவாலிகா மற்றும் உறவினர்கள் காரில் திரும்பினர். மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதால் மணமகள் பிரவாலிகா உட்பட மூவர் பலியாயினர். யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில் 'பைக்'கில் பின்னால் அமர்ந்து சென்ற இரு இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களுடன் மழை வெள்ளத்தில் சிக்கி மாநிலம் முழுதும் ஏழு பேர் பலியாகி உள்ளனர்.

சி.பி.ஐ., 31 வழக்குகள் பதிவு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திரிணமுல் காங்கிரசார், தங்கள் கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இது குறித்து கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே 28 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., தரப்பில் மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவற்றின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X