பொது செய்தி

இந்தியா

95,500 பதிவுகள் நீக்கம் 'கூகுள்' நிறுவனம் அதிரடி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 95 ஆயிரத்து 500 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளதாக 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'கூகுள்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மே 26 முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்பதாக கூகுள் நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.
 95,500 பதிவுகள் நீக்கம் 'கூகுள்' நிறுவனம் அதிரடி

புதுடில்லி:இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 95 ஆயிரத்து 500 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளதாக 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'கூகுள்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மே 26 முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்பதாக கூகுள் நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனம், பயனாளர்களிடமிருந்து 36 ஆயிரத்து 934 புகார்களை ஜூலையில் பெற்றது.

இவற்றை பரிசீலித்து, பதிப்புரிமை மீறல், வர்த்தக முத்திரை, நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு, போலி, பாலியல் விவகாரம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் 95 ஆயிரத்து 500 உள்ளடக்கங்களை கூகுள் நீக்கி உள்ளது. விதிகளை மீறியதாக ஏப்ரலில் 59 ஆயிரத்து 350 உள்ளடக்கங்களும், மே மாதத்தில் 71 ஆயிரத்து 132 உள்ளடக்கங்களும், ஜூனில் 83 ஆயிரத்து 613 உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X