சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

முதலீடுக்கு ஆலோசகர் அவசியம்

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேமிப்பு, முதலீடு போன்றவற்றிற்கு நிதி ஆலோசகர் உதவி அவசியம் என கூறுகிறார் சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் பாலமுருகன்: கடன் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதே அலாதியான சுகம் தான். 21 வயதிலேயே வேலைக்கு சென்று விட்டதால், வீட்டுக்காக வாங்கியிருந்த கடன் மற்றும் பிற கடன்களை, அடுத்த சில ஆண்டுகளிலேயே அடைத்தேன்.வருமானம் நன்றாக இருந்ததால், முதலீடு செய்யலாமே
சொல்கிறார்கள்

சேமிப்பு, முதலீடு போன்றவற்றிற்கு நிதி ஆலோசகர் உதவி அவசியம் என கூறுகிறார் சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் பாலமுருகன்: கடன் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதே அலாதியான சுகம் தான். 21 வயதிலேயே வேலைக்கு சென்று விட்டதால், வீட்டுக்காக வாங்கியிருந்த கடன் மற்றும் பிற கடன்களை, அடுத்த சில ஆண்டுகளிலேயே அடைத்தேன்.வருமானம் நன்றாக இருந்ததால், முதலீடு செய்யலாமே என்று எண்ணிய போது, நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியை சந்தித்து, என் வசதி என்ன, வருமானம் என்ன, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் என்பன போன்ற விபரங்களை ஒளிவு, மறைவு இல்லாமல் கூறினேன்.

அவரை சந்திப்பதற்கு முன் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதும், தங்கம் வாங்கி வைத்திருப்பதும் தான் நல்ல முதலீடு என எண்ணி இருந்தேன். ஆனால், அவர் தான், மியூச்சுவல் பண்ட் முதலீடு பற்றி எனக்கு சொன்னார்.அவரின் ஆலோசனைப் படி, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன்.இப்போது எவ்வித பணக்கஷ்டமும் இன்றி, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் நிதி ஆதாரங்களை வைத்துள்ளேன்.முதலீடு செய்ய நான், 2014ல் துவங்கினேன். அப்போது மாதம், 18 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன்.இந்த தொகையை ஆண்டுதோறும் சிறுக சிறுக உயர்த்தி வந்து இப்போது மாதம், 50 ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்கிறேன்.நாம் சம்பாதிக்கும் பணம், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நமக்கு தர வேண்டும்.

அதற்கு ஒரே முதலீடு, மியூச்சுவல் பண்ட் மட்டும் தான். பங்குச்சந்தை முதலீட்டில் இருக்கும் நேரடியான, 'ரிஸ்க்' மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இல்லை.நான் முதலீடு செய்யும் தொகையை என் தேவையை பொறுத்து, 'லார்ஜ்கேப்' திட்டங்களில் 29 சதவீதம், 'பிளக்சிகேப்' திட்டங்களில் 20 சதவீதம், 'மிட்கேப்' திட்டங்களில் 33 சதவீதம், 'ஸ்மால்கேப்' திட்டங்களில் 13 சதவீதம், 'இன்டர்நேஷனல் பண்ட்' திட்டங்களில் 5 சதவீதம் என பிரித்து முதலீடு செய்கிறேன்.அனைத்து திட்டங்களில் இருந்தும் நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்றைய நிலையில் மக்களில் பலருக்கு ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் செய்வது தான் சிறந்த முதலீடு என்ற எண்ணம் உள்ளது.அது தவறு. அதை விட லாபம் தரக் கூடியவை, மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்.எனவே, நல்ல நிதி ஆலோசகரை அணுகி, அவரின் அறிவுரைப்படி முதலீடு செய்து வந்தால், நிதியும் பெருகும்; எந்த இடர்பாடும் நம்மை அணுகாது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
04-செப்-202108:38:07 IST Report Abuse
Muraleedharan.M சில முதியோர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் தொல்லை வீட்டில் தாங்க முடியாமல் தபால் ஆபிஸ், வங்கிகளுக்கு அனுப்பி அங்கு உள்ளவர்களுக்கு தொல்லை தருகிறார் கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X