பொது செய்தி

இந்தியா

18,600 அடி உயரத்தில் ராணுவம் அமைத்த சாலை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
லே:இந்தியாவில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை லடாக்கில் திறக்கப்பட்டது.லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் பாங்காங் ஏரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் 18,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை நேற்று திறக்கப்பட்டது. லடாக் எம்.பி., ஜம்யங்க் ஷெரிங் நம்க்யால், இந்த சாலையை திறந்து வைத்து பேசியதாவது:இந்திய ராணுவத்தின் 58 இன்ஜினியரிங் ரெஜிமென்ட் இந்த சாலையை

லே:இந்தியாவில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை லடாக்கில் திறக்கப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் பாங்காங் ஏரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் 18,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை நேற்று திறக்கப்பட்டது. லடாக் எம்.பி., ஜம்யங்க் ஷெரிங் நம்க்யால், இந்த சாலையை திறந்து வைத்து பேசியதாவது:இந்திய ராணுவத்தின் 58 இன்ஜினியரிங் ரெஜிமென்ட் இந்த சாலையை அமைத்துள்ளது.

கர்துன்கலா என்ற இடத்தில் 18,380 அடி உயரத்தில் அமைந்துள்ள சாலையே இதுவரை அதிக உயரத்தில் அமைந்த சாலையாக இருந்தது. இப்போது 18,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சாலை இந்தியாவிலேயே அதிக உயரத்தில் அமைந்த சாலை என்ற பெருமையை பெறுகிறது.

இந்த சாலை வாயிலாக பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். இந்த சாலையால் லே நகரில் இருந்து பாங்காங் ஏரிக்கு வருவதற்கு 41 கி.மீ., பயண துாரம் குறையும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X