பொது செய்தி

இந்தியா

கட்சிகள் ரூ.3,377 கோடி வசூல் : கொடுத்தது யார் என்றே தெரியாது

Updated : செப் 02, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், பெயர் சொல்ல விரும்பாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து தேசிய கட்சிகள் 3,377 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனப்படும் தேர்தல் உரிமை குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் பெயர் சொல்லாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து,
கட்சிகள் ரூ.3,377 கோடி வசூல், கொடுத்தது யார் ,தெரியாது

புதுடில்லி : கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், பெயர் சொல்ல விரும்பாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து தேசிய கட்சிகள் 3,377 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனப்படும் தேர்தல் உரிமை குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் பெயர் சொல்லாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து, பா.ஜ.,வுக்கு 2,642 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதே காலத்தில் காங்கிரசுக்கு 526 கோடி ரூபாய் கிடைத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகளுக்கு 2019 - 20ம் நிதியாண்டில், அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 3,377 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.இது, கட்சிகளுக்கு கிடைத்த மொத்த நன்கொடையில் 71 சதவீதம். அதே காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு 2,993 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.கடந்த 2004 - 05 முதல், 2019 - 20 வரையிலான காலகட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் 14 ஆயிரத்து 651 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இது யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரம் இல்லை.

அரசியல் கட்சிகள் வசூல் செய்யும் நன்கொடை தொடர்பான ஆவணங்களை, இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி மற்றும் தேர்தல் கமிஷன் ஆகியவை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.அப்போது தான் இந்த நன்கொடை விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை உருவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
01-செப்-202122:03:54 IST Report Abuse
jagan "ஜனநாயக சீர்திருத்த சங்கம் " - இதே சங்கம் மிஷ'நரி' களுக்கு எவ்ளோ வருது எண்டு சொல்ல முடியுமா ?தெகிரியம் இருக்கா ?
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
01-செப்-202118:51:36 IST Report Abuse
chennai sivakumar Last week I went to donate 10000/- ten thousand to old age home. They asked my pan, adhaar, adress,mobile etc etc that too it was an account payee cheque. It's quite surprising to read the news. God help our country
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
01-செப்-202115:36:45 IST Report Abuse
Srinivas.... ஒருவர் யார் வங்கிக்கணக்கிலாவது பணம் செலுத்த போனால் பெயர், விலாசம், கைப்பேசி எண் போன்ற அனைத்து விபரங்களும் வங்கிகளால் பெற்றுக்கொண்டபிறகே பணம் செலுத்த அனுமதிப்பர். இது சாதாரண நடைமுறை. இதுவே கோடிகளில் என்றால் நிச்சயமாக செலுத்துபவர் விபரம் இல்லாமல் செலுத்த முடியாது. பண மதிப்பிழப்பின்போது ஒரு சில நோட்டுக்களை மாற்ற மக்கள் வரிசையில் நின்றபோது பல நூறு கோடி வெளியில் தெரியாமல் பீசப்பி துணையுடன் குட்கா பாஸ்கர் கும்பல் மாற்றிக்கொண்டு சென்றது. இதுதான் பீசப்பியின் கள்ள பணத்தை ஒழித்த யோக்கிதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X