ஆடல், பாடலுடன் திருமண கொண்டாட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காபூல்:ஆப்கனை பழமைவாதிகளான தாலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும் அங்கு திருமண நிகழ்ச்சிகளில் வழக்கம் போல ஆடல், பாடல் கொண்டாட்டம் களை கட்டுகிறது.ஆப்கனில் 1996 - 2001 வரையிலான தலிபான் ஆட்சியில் இஸ்லாமிய பாடல்கள் தவிர இதர பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆப்கனை மீண்டும் தலிபான் கைப்பற்றியுள்ளதால் மீண்டும் இன்னிசை பாடல்களுக்கு தடை விதிக்கப்படும் என

காபூல்:ஆப்கனை பழமைவாதிகளான தாலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும் அங்கு திருமண நிகழ்ச்சிகளில் வழக்கம் போல ஆடல், பாடல் கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆப்கனில் 1996 - 2001 வரையிலான தலிபான் ஆட்சியில் இஸ்லாமிய பாடல்கள் தவிர இதர பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆப்கனை மீண்டும் தலிபான் கைப்பற்றியுள்ளதால் மீண்டும் இன்னிசை பாடல்களுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து காபூலில் திருமண மண்டபம் ஒன்றின் மேலாளர் ஷதாப் அசிமி கூறியதாவது: ஆப்கனை தலிபான் கைப்பற்றிய இரு வாரங்களில் ஏழு திருமண நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் நடந்துள்ளன. வழக்கமாக திருமண விழாக்களில் இன்னிசைக் கச்சேரி நடக்கும். இந்த முறை இசைக் கச்சேரிக்கு தலிபான் தடை ஏதும் விதிக்கவில்லை.ஆனால் பாடகர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாட வர மறுக்கின்றனர். அதனால் பதிவு செய்யப்பட்ட பாடல்களை ஒலிபரப்புகிறோம். அதைக் கேட்டு, திருமண வீட்டார் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

தலிபான்கள் அவ்வப்போது வந்து விசாரிக்கும் போது அச்சமாக உள்ளது. ஆனால் அவர்கள், 'என்ன உதவியென்றாலும் கேளுங்கள்' என கூறிச் செல்கின்றனர். முந்தைய ஆட்சியில், அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் லஞ்சம் கேட்பர். அத்துடன் அவர்களது நண்பர்களுக்கும் விருந்து தரச் சொல்வர். ஆனால் தலிபான்கள் இதுவரை லஞ்சம் கேட்டதில்லை. எனினும் அச்சம் காரணமாக மண்டபத்தில் திருமணங்கள் நடப்பது 80 சதவீதம் குறைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X