பொது செய்தி

தமிழ்நாடு

இலவச விநாயகர் சிலைகள்: அறநிலையத் துறை வழங்குமா?

Updated : செப் 01, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை ;ஹிந்து சமயத்தை வளர்க்கவும், ஆன்மிகத்தை தழைக்கச் செய்யவும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்திக்காக, களிமண் விநாயகர் சிலைகளை, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.விநாயகர் என்றால், தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள். 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக
விநாயகர், சிலைகள், அறநிலையத்துறை, வழங்குமா,

சென்னை ;ஹிந்து சமயத்தை வளர்க்கவும், ஆன்மிகத்தை தழைக்கச் செய்யவும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்திக்காக, களிமண் விநாயகர் சிலைகளை, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

விநாயகர் என்றால், தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள். 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. 'ஓம்' எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார்.


குடும்ப விழாவிநாயகருக்கு சதுர்த்தி பிரதான விழா. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது, விநாயகரின் ஜெயந்தி நாளாக கருதப்படுகிறது. மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப் பட்டிருக்கிறது. பின், பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில மக்களின் குடும்ப விழாவாக இது மாறியது. மக்கள் தங்கள் வீடுகளிலும், விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தியை மாற்றினார். அதன்பின், தென்மாநிலங்களிலும் கோலாகமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை நகரில், ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து, வழிபாடு நடத்தும் பழக்கம் வந்தது.


மன சாந்தி


கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதாரம், வருமானம், இயல்பு வாழ்க்கை, சந்தோஷம் ஆகியவற்றை இழந்து தவிக்கும் மக்களுக்கு மனசாந்தி, நிம்மதி, ஆறுதல் தருவது ஆன்மிகப் பாதை மட்டுமே. விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதன் வாயிலாக, துவண்டு போயிருக்கும் மக்களுக்கு நல்ல சிந்தனைகளும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.

எனவே, மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஏதுவாக, கோவில்களில் களிமண் விநாயகர் சிலைகளை இலவசமாக வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆலோசிக்க வேண்டும்.


வடபழநி கோவில்


கடந்த ஆண்டு, நோய் தொற்றால் துவண்டிருந்த சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 250 பேருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், களிமண் விநாயகர், அருகம்புல், ஒன்பது நாட்களுக்கு வீட்டில் வைத்து விநாயகரை வழிபாடு செய்யும் முறை குறித்த சிறு புத்தகம் வழங்கப்பட்டது.இந்த நடைமுறை, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல, தமிழகத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், இந்தாண்டு களிமண் விநாயகர் சிலைகள் வழங்கி, ஹிந்து சமயத்தையும், ஆன்மிகத்தையும் காக்க வேண்டும் என, ஆன்மிக நல விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அமைச்சருக்கு கோரிக்கை

அறநிலையத் துறை என்றால் ஊழல், மோசடி, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சிலைகள் திருட்டு என, அடுத்தடுத்த நிகழ்வுகளால் கேலிப் பொருளாகி இருந்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள சேகர்பாபு, 100 நாட்களில், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இவரால் பல கோவில்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன; ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.


latest tamil newsஇந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை, ஏழை, எளியவர்களும் கொண்டாடும் வகையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவசமாக விநாயகர் சிலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
01-செப்-202117:00:10 IST Report Abuse
r.sundaram மதச்சார்பு அற்ற அரசு என்றால், முஸ்லிம்களுக்கு கஞ்சிக்கு அரிசி இலவசமாக கொடுக்கலாமா? சிறுபான்மையினருக்கு கொடுத்தால் அது மத சார்பு அற்ற செயலாக ஆகிவிடுமா? அப்போ இந்துக்களுக்கு என்று அரசு ஒன்றுமே செய்யக்கூடாதா? அமைச்சரை மத விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஏழுதுகிறார்கள், ஆனால் நடவடிக்கைகளை பார்த்தால் அப்படி தெரிய வில்லையே? இவ்வளவுகாலமும் சும்மா இருந்த அந்த சட்டத்தின் பிரகாரம் அர்ச்சகர் நியமனம் செய்ய வேண்டுமா?
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
01-செப்-202116:41:40 IST Report Abuse
sri இந்து அறநிலையத்துறை அமைத்து , இந்து மத ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற அரசு , இன்று அறநிலையத்துறை வருமானத்தில் , துறை ஊழியர்களுக்கும் , அர்ச்சகர்களும் , பூஜாரிகளுக்கும் , ஓதுவார்களுக்கும் ஒழுங்காக சம்பளம் குடுக்க முடியாமல் விழிபிதுங்குகிறது. இதற்குமேல் , பண்டிகைகளுக்கு சிலைகள் வழங்கி ஏழை எளியவர்களுக்கு உதவ , அரசு மக்கள் வரிப்பணத்தில் இந்து மதத்திற்காக செலவு செய்ய வேண்டும் . இதை மத சார்பற்ற அரசு செய்யலாமா என்று குரலெழுப்பி , நீதிமன்றங்களில் வழக்காட , வீரமணி கும்பல் தயாராக இருக்கிறது. இந்த நிலைமையை எதிர்கொள்ள ஒரே வழி , ஒன்றிய அரசு செய்வதுபோல , பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதுபோல , இந்து கோவில்களை , முன்போல அந்தந்த ஊர் இந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டு , துறை ஊழியர்களை வேறே துறைகளில் பணிமாற்றம் செய்ய வேண்டியதுதான் . அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்ற முடிவு இதுதானாக இருக்கும்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
01-செப்-202116:22:46 IST Report Abuse
Laks Giri எங்களுக்கு தெரியும் சிலைவைக்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X