சம்பவம் செய்தி

தமிழ்நாடு

' ப்ளீஸ் ' வீட்டுக்கு வாங்க அப்பா :காணாமல் போன தந்தைக்கு மகள் ஆடியோ

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்பூர்:வீட்டை விட்டு வெளியேறிய அப்பாவை, 'திரும்ப வீட்டுக்கு வந்து விடுங்கள்' என மகள், பேத்தி வெளியிட்ட ஆடியோ பதிவு திருப்பூரில் சமூகவலைதளங்களில் நேற்று பரவியது.திருப்பூர் முருகம்பாளையம், ஸ்ரீ சிவசக்திநகரை சேர்ந்தவர், சசிக்குமார், 52. பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியேறியவர், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் வீரபாண்டி
 ' ப்ளீஸ் ' வீட்டுக்கு வாங்க அப்பா :காணாமல் போன தந்தைக்கு மகள் ஆடியோ

திருப்பூர்:வீட்டை விட்டு வெளியேறிய அப்பாவை, 'திரும்ப வீட்டுக்கு வந்து விடுங்கள்' என மகள், பேத்தி வெளியிட்ட ஆடியோ பதிவு திருப்பூரில் சமூகவலைதளங்களில் நேற்று பரவியது.திருப்பூர் முருகம்பாளையம், ஸ்ரீ சிவசக்திநகரை சேர்ந்தவர், சசிக்குமார், 52. பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று வீட்டில் இருந்து வெளியேறியவர், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரது வீட்டில்,' என்னை தேட வேண்டாம்' என சசிக்குமார் எழுதி வைத்து சென்று விட்ட கடிதத்தை கைப்பற்றினர்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் வாட்ஸ்அப்பில், ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவரது மகள் மற்றும் பேத்தி இருவரும் பேசுகின்றனர்.

ஆடியோவில்,' அப்பா நீங்க எங்கே போனீங்க; நீங்கள் இல்லாம நாங்கள் எப்படி கஷ்டப்படுவோம்னு உங்களுக்கு தெரியாதா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீங்க போனது இருந்து படுத்தே கிடக்குதுப்பா. எங்கிருந்தாலும் தயவு செய்து, வாங்க அப்பா. நீங்க இல்லாம நாங்க இருக்க மாட்டோம்னு உங்களுக்கு தெரியும்ல; நீங்க அப்படி எங்கள வளர்க்கவும் இல்ல. உங்க கைக்குள் பொத்திபொத்தி வெச்சு வளர்த்திட்டு, இப்ப எங்களை விட்டுட்டு போய்ட்டீங்களே அப்பா.எங்க இருந்தாலும் தயவு செய்து வாங்க. என்ன கஷ்டமாக இருந்தாலும் எங்க கிட்ட சொல்லுங்க அப்பா.

எத இருந்தாலும் சொல்லுங்க. ப்ளீஸ்...எங்கிருந்தாலும் வாங்க. எனக்காக தான் இருக்கேன்னு சொல்வீங்க. இப்ப என்னை அநாதை மாதிரி விட்டுட்டு போயிட்டீங்கல்ல. திரும்பி வாங்க அப்பா. ப்ளீஸ். தாத்தா சீக்கிரம் வாங்க. உங்களை விட்டு எங்களால் இருக்கு முடியாது. ப்ளீஸ் தாத்தா, வாங்க தாத்தா,' என, அந்த ஆடியோ நிறைவு பெறுகிறது.வழக்குபதிவு செய்த வீரபாண்டி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X