அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைதாகி விடுவிப்பு!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (7+ 20)
Share
Advertisement
சென்னை : சென்னையில், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறைந்த ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலையை மூடி விட்டு, அதன் கீழான கல்லுாரிகளை,அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகம் முன் மறியலில் இறங்கியதால், அரசு இந்த நடவடிக்கையை சட்டசபையில், நேற்று
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் , கைது ,விடுவிப்பு!

சென்னை : சென்னையில், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மறைந்த ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலையை மூடி விட்டு, அதன் கீழான கல்லுாரிகளை,அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகம் முன் மறியலில் இறங்கியதால், அரசு இந்த நடவடிக்கையை சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 2013ம் ஆண்டு அண்ணாமலை பல்கலை சட்டம், 1981ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலை சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், 2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை சட்டத்தை ரத்து செய்வதற்கும், புதிய மசோதாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.


* அ.தி.மு.க., - அன்பழகன்: இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம்.

* சபாநாயகர்: பதிவு செய்து கொள்கிறேன்.


* எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்: உயர் கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, ஆரம்ப நிலையிலேயே முழுமையாக எதிர்க்கிறோம். தொடர்ந்து அவர் பேச முற்பட்டும், சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

* சபாநாயகர்: உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளோம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது, விரிவாக பேசுங்கள். அதை, அ.தி.மு.க.,வினர் ஏற்காமல், அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு கேட்டார்.

* அமைச்சர் வேலு: சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, அரசியல் கட்சிகள், தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது தான், விரிவாக பேசலாம்.

* அமைச்சர் துரைமுருகன: எதிர்க்கட்சியினர் சார்பில், அன்பழகன் சட்டத்தை அறிமுக நிலையிலே எதிர்ப்பதாக கூறி விட்டார். எனவே, அவர்கள் இருக்க மாட்டார்கள். வெளிநடப்பு தான் செய்வர்; அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

* பன்னீர்செல்வம்: எங்களை வெளியில் செல்லும்படி கூறுகிறார்.

* சபாநாயகர்: அதை தவறு என்பதை நிரூபிக்க, சபையில் அமருங்கள்.அதை ஏற்க மறுத்த பன்னீர்செல்வம், பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


சாலை மறியல்



பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்றனர். அங்கு, பன்னீர்செல்வம் தலைமையில், ஆலோசனை நடந்தது. அரை மணி நேரத்திற்கு பின், அனைவரும் வெளியே வந்தனர். சட்டசபை கூட்டம் நடக்கும், கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே, வாலாஜா சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக, போலீசார் குவிக்கப்பட்டனர். 'ஜெயலலிதா பல்கலையை மூடாதே' என்று, கோஷமிட்டனர். பன்னீர்செல்வம் உட்பட, 63 எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனால், அண்ணாசாலை உட்பட, பல இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மட்டுமின்றி, மாநிலம் முழுதும் நேற்று அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பல்கலை அமைந்த, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், ௨௧ இடங்களில் போராட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


அ.தி.மு.க.,வினர் மறியல்



ஜெயலலிதா பல்கலை சட்டத்தை ரத்து செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரி அருகே, பெரம்பூர் மேற்கு பகுதி செயலர் பாஸ்கர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசார் பேச்சு நடத்தியும், கலையாமல் வாக்குவாதம் செய்ததால் அனைவரையும் கைது செய்து, அருகி லுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதே போல, தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பழனிசாமி 'ஆப்சென்ட்!'



அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, நேற்று சபைக்கு வரவில்லை.


பா.ஜ., எதிர்ப்பு



''ஜெயலலிதா பல்கலையை ரத்து செய்யும் மசோதாவை, பா.ஜ., ஆதரிக்கவில்லை,'' என, அக்கட்சியின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன், மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது தெரிவித்தார். பா.ம.க., தரப்பில் எதுவும் தெரிவிக்கவிப்படவில்லை. மாலையில் மசோதா, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202100:21:54 IST Report Abuse
Pugazh V . ஹா ஹா ஹா..செம..செம..செம.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
01-செப்-202118:10:47 IST Report Abuse
E. RAJAVELU குற்றவாளி ஜெயலலிதாவுக்காக போராடுபர்களும் குற்றவாளிகளே. மீதம் உள்ள இரு பலகலை கழகங்களில் இருந்தும் ஜெயலலிதா பெரியாரை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடவேண்டும்.
Rate this:
Cancel
01-செப்-202114:07:16 IST Report Abuse
Thangarajan Kanagaraman இது ரொம்ப அவசியம் மாறி மாறி இதே பிழைப்பா போச்சு இரண்டு பேருயம் ஒழிந்தால்(திமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X