உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவியேற்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் உட்பட, ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது.பரிந்துரைநீதிபதி

புதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் உட்பட, ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது.


பரிந்துரை



நீதிபதி பணியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' ஒன்பது பேரை நீதிபதிகளாக நியமிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, ஒன்பது பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி, தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றனர்.

மேலும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்பது நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஒன்பது நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.


எதிர்பார்ப்பு



உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல் முறை. புதிதாக பதவியேற்ற மூன்று பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்னாவுக்கு 2027ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. இதன் வாயிலாக நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X