விநாயகர் சதுர்த்தி விழா :அமைச்சருக்கு கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா :அமைச்சருக்கு கோரிக்கை

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
அறநிலையத் துறை என்றால் ஊழல், மோசடி, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சிலைகள் திருட்டு என, அடுத்தடுத்த நிகழ்வுகளால் கேலிப் பொருளாகி இருந்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள சேகர்பாபு, 100 நாட்களில், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இவரால் பல கோவில்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன; ஆக்கிரமிப்பு

அறநிலையத் துறை என்றால் ஊழல், மோசடி, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சிலைகள் திருட்டு என, அடுத்தடுத்த நிகழ்வுகளால் கேலிப் பொருளாகி இருந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள சேகர்பாபு, 100 நாட்களில், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இவரால் பல கோவில்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன; ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை, ஏழை, எளியவர்களும் கொண்டாடும் வகையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவசமாக விநாயகர் சிலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X