சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,யிடம் சயான் மனு

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு கொலை வழக்கில், நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நீலகிரி எஸ்.பி.,க்கு மனு அனுப்பி உள்ளார். நீலகிரி மாவட்டம், கோடநாடு, கொலை கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 10 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயானுக்கு, 'ஊட்டியை விட்டு வெளியே

ஊட்டி:கோடநாடு கொலை வழக்கில், நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நீலகிரி எஸ்.பி.,க்கு மனு அனுப்பி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு, கொலை கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 10 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயானுக்கு, 'ஊட்டியை விட்டு வெளியே செல்லக் கூடாது; வாரத்தில், திங்கட்கிழமை ஊட்டி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி, சயானிடம் மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில், சில முக்கிய தகவல்களை அவர் தெரிவித்திருப்பதால், கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சயானுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.அவர், போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத்துக்கு பதிவு தபாலில் மனு அனுப்பியுள்ளார். மேலும், போலீசாரிடம் நேரடியாக இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
01-செப்-202119:39:33 IST Report Abuse
RaajaRaja Cholan காசுக்கு கூலி வேலை பார்க்கும் கொலைகார பயல்களுக்கு பாதுகாப்பு ஒருத்தனை கொன்னீங்களே டா , நீ எல்லாம் மனிதன் , உனக்கு பாதுகாப்பு வேறு கேடா , கொலை வெறி பிடித்த அறிவு இல்லா மிருகமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X