சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன் விரோதத்தில் ஓட்டுனர் கொலை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : முன் விரோதத்தில், ஓட்டுனரை வெட்டி கொலை செய்தோரை போலீசார் தேடி வருகின்றனர்.எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஹேமநாதன், 28. வல்லுார் அனல் மின் நிலையத்தில் உள்ள ஒப்பந்த நிறுவனத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.ஐந்து ஆண்டுகளாக, இவர் மீஞ்சூர் அடுத்த, நெய்தவாயல் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்ல, வீட்டில் இருந்து வெளியே

மீஞ்சூர் : முன் விரோதத்தில், ஓட்டுனரை வெட்டி கொலை செய்தோரை போலீசார் தேடி வருகின்றனர்.

எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஹேமநாதன், 28. வல்லுார் அனல் மின் நிலையத்தில் உள்ள ஒப்பந்த நிறுவனத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.ஐந்து ஆண்டுகளாக, இவர் மீஞ்சூர் அடுத்த, நெய்தவாயல் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்ல, வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, பைக்கில் வந்த மூவர் கும்பல், ஹேமநாதனை சரமாரியாக வெட்டி தப்பியது.

இதில் படுகாயமடைந்த ஹேமநாதனை, '108' ஆம்புலன்ஸ் வயிலாக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்தார்.மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், எண்ணுார் பகுதியில் வசித்தபோது, அங்குள்ள சிலருடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, ஹேமநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தெரிய வந்தது. மீஞ்சூர் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X