மாணவர்களிடம் கனிவு கண்டக்டர்களுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களிடம் கனிவு கண்டக்டர்களுக்கு அறிவுரை

Added : ஆக 31, 2021
Share
உடுமலை:பஸ்சில் பயணிக்கும் மாணவ - மாணவியரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்' என, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று முதல், கல்லுாரி மற்றும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.ஒன்பது முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. பஸ் பாஸ் வழங்கும் வரை, அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க, அரசு அனுமதி

உடுமலை:பஸ்சில் பயணிக்கும் மாணவ - மாணவியரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்' என, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல், கல்லுாரி மற்றும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.ஒன்பது முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. பஸ் பாஸ் வழங்கும் வரை, அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க, அரசு அனுமதி அளித்து உள்ளது.சீருடை அல்லது பள்ளி மற்றும் கல்லுாரியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும்.

ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை மட்டுமே நடந்துள்ள நிலையில், அவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை.அரசு போக்குவரத்துக் கழக உடுமலை கிளை மேலாளர் மணிகண்டன் கூறுகையில், ''பஸ்சில் சீருடையுடன் பயணிக்கும் மாணவ - மாணவியரை, எக்காரணம் கொண்டும் கடிந்து கொள்ளக் கூடாது.

''சீருடை மற்றும் அடையாள அட்டை இல்லாதிருந்தால், அவர்களிடம் கனிவான அணுகுமுறையும், தேவையான வழிநடத்தலும் அவசியம் என, கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X