பொது செய்தி

தமிழ்நாடு

மண்ணில் கிடைத்த சிலைகள் ஒப்படைக்க கோரி மனு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொன்னேரி : வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்வதற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு, கிராம மக்கள் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.பொன்னேரி அடுத்த, கொடூர் கிராமத்தில், கடந்த, 26ம் தேதி, கோபி என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டினர். மண்ணில் புதைந்து கிடந்த, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருமாள் என, ஒரே இடத்தில் மூன்று சிலைகள்

பொன்னேரி : வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்வதற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு, கிராம மக்கள் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.

பொன்னேரி அடுத்த, கொடூர் கிராமத்தில், கடந்த, 26ம் தேதி, கோபி என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டினர். மண்ணில் புதைந்து கிடந்த, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருமாள் என, ஒரே இடத்தில் மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.மண்ணில் கிடைத்த சிலைகளை கிராம மக்கள் வெளியில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று, கொடூர் கிராம மக்கள் பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், மேற்கண்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் பெருமாள் கோவில் ஒன்று அமைந்து உள்ளது.அந்த கோவிலில், பூமியில் கிடைத்த சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளதால், அவற்றை தங்களிடம் வழங்க வேண்டும் என, தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X