பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை ராகு கால பூஜை நடந்தது. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில்

பாலாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை ராகு கால பூஜை நடந்தது. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

2 வி.ஏ.ஓ.,க்கள் 'சஸ்பெண்ட்'

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வருவாய் கோட்டம், திருப்போரூர் தாலுகா, காயார் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் தாம்பரம் வருவாய் கோட்டம், வண்டலுார் தாலுகா, கொளத்துார் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா ஆகியோர், கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு பதிவு செய்துள்ளனர்.மாவட்ட நிர்வாக பணிகளில் குந்தகம் ஏற்படுத்தியதற்காக, இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விவசாயிகள் ஆய்வு கூட்டம்

திருத்தணி: திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கீழ், ஏழு ஊராட்சிகளில், விவசாயிகள் வளர்ச்சி அடைய என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ரமேஷ் தலைமை வகித்து பேசினார். மேலும் கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை, பொறியியல், வணிகம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை என, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை கூறினர்.முதற்கட்டமாக இத்திட்டம், மாம்பாக்கம், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, டி.சி.கண்டிகை, கன்னிகாபுரம் கிருஷ்ணசமுத்திரம் மற்றும் பீரகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்த வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அரிசி மூட்டைகள் பறிமுதல்

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து, தமிழக ரேஷன் அரிசி, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், ஒரே நேரத்தில் பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது ஆந்திராவிற்கு கடத்திய, 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், அரிசி மூட்டைகளை திருத்தணி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X