பொது செய்தி

தமிழ்நாடு

பாலிமர் தொழில் பூங்கா அக்டோபரில் செயல்படும்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில், பாலிமர் தொழில் பூங்கா, அடுத்த மாதம் செயல்பட தயார் நிலையில் இருக்கும் என, தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிப்காட் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வாயலுார் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில், 265 ஏக்கர் பரப்பளவில், பாலிமர் தொழில் பூங்காவை,

சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில், பாலிமர் தொழில் பூங்கா, அடுத்த மாதம் செயல்பட தயார் நிலையில் இருக்கும் என, தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிப்காட் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வாயலுார் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில், 265 ஏக்கர் பரப்பளவில், பாலிமர் தொழில் பூங்காவை, 216 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது.பாலிமர் பொருட்கள் தயாரிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் அமைக்க ஏதுவான உட்கட்டமைப்பு வசதிகள் உடையதாக, இந்த பூங்கா இருக்கும்.மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன துறையின் பிளாஸ்டிக் பூங்கா திட்டத்தின் கீழ், இந்த பூங்கா செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோலியத் துறை ஒப்புதல் அளித்து உள்ள 40 கோடி ரூபாய் மானிய தொகையில், 15 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள், நிர்வாக கட்டடம் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம் ஆகியவற்றிற் கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் இந்த பூங்கா செயல்பட தயார் நிலையில் இருக்கும் என, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X