பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த கால்வாய்களை தாங்களே கட்டிய வியாபாரிகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : சேதமடைந்த கால்வாயை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் கால்வாய் அமைத்தனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டில்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. பஜார் பகுதியில் உள்ள நான்கு சாலைகளில்

ஊத்துக்கோட்டை : சேதமடைந்த கால்வாயை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் கால்வாய் அமைத்தனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டில்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. பஜார் பகுதியில் உள்ள நான்கு சாலைகளில் 700க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் உள்ளன. குடியிருப்புகளும் உள்ளன.மேற்கண்ட பகுதிகளில் இருந்து கழிவு நீர் வெளியேற கால்வாய் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கால்வாய் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது.

அண்ணாதுரை சிலை அருகில் சத்தியவேடு செல்லும் சாலையில் கால்வாய் பெருமளவு சேதமாய் இருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என, வியாபாரிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி வியாபாரிகள், 100 மீட்டர் துாரத்திற்கு தங்களது சொந்த செலவில் கால்வாய் அமைத்தனர்.கடந்த மாதம் இதே சாலையில் மற்றொரு பகுதியில் வியாபாரிகள் கால்வாய் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X