அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பல்கலை இணைப்புக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்பூர்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.காங்கயம் ரோடு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார்.பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி,
 ஜெ., பல்கலை இணைப்புக்கு எதிர்ப்பு; அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.காங்கயம் ரோடு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார்.பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசின் முடிவை கைவிட வேண்டுமென கோஷமிட்டனர்.l புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், இலக்கிய அணி செயலாளர் முத்து, விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்லடம்: பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித் தார். நிர்வாகிகள் பழனிசாமி, துரைக்கண்ணன், ஞானாம்பிகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அவிநாசி: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராமசாமி, நகர துணை செயலாளர் மூர்த்தி, நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால், திருமுருகன்பூண்டி நகர செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.விவசாய பிரிவு ஒன்றிய துணை தலைவர் சண்முகம், ஒன்றிய பாசறை செயலாளர் பூபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல் கார்த்தி, மாணவரணி செயலாளர் மோகன் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வெள்ளகோவில்: புது பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய சேர்மன் வெங்கடேசசுதர்சன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி முன்னிலை வகித்தனர்.நகர துணை செயலாளர் வைகை மணி, பொருளாளர் பவானி ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X