பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறியாளர்கள் முதல்வருடன் சந்திப்பு: 'பிரச்னைகள் தீரும்' என நம்பிக்க

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பல்லடம்:கூலி உயர்வு ஒப்பந்தம், ரக ஒதுக்கீடு, வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர், சென்னையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.''கூலி உயர்வு, கடன் பிரச்னை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசை
 விசைத்தறியாளர்கள் முதல்வருடன் சந்திப்பு: 'பிரச்னைகள் தீரும்' என நம்பிக்க

பல்லடம்:கூலி உயர்வு ஒப்பந்தம், ரக ஒதுக்கீடு, வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர், சென்னையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.''கூலி உயர்வு, கடன் பிரச்னை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 7 ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காததால், கடன் சுமைக்கு தள்ளப்பட்டோம்.குறிப்பாக, இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரை சந்தித்து மனு அளித்தோம். இதுதொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். தொடர்ந்து, கைத்தறி துறை அமைச்சர் காந்தியை சந்தித்தும் மனு அளித்துள்ளோம்.முதல்வர், மற்றும் அமைச்சரை சந்தித்ததால், கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று, விசைத்தறியாளர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X