அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமங்கள் கடத்தலை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காங்., - பிரின்ஸ்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு, கனிமங்கள் கடத்தி செல்வதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் துரைமுருகன்:அண்டை மாநிலங்களுக்கு, கனிமங்கள் எடுத்து செல்வதை தடுக்க சட்டத்தில் இடமில்லை. அதேநேரம், சட்ட விரோதமாகவோ, அதிக அளவிலோ, அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்து செல்வதை தடுக்க, அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.பிரின்ஸ்:

காங்., - பிரின்ஸ்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு, கனிமங்கள் கடத்தி செல்வதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் துரைமுருகன்:

அண்டை மாநிலங்களுக்கு, கனிமங்கள் எடுத்து செல்வதை தடுக்க சட்டத்தில் இடமில்லை. அதேநேரம், சட்ட விரோதமாகவோ, அதிக அளவிலோ, அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்து செல்வதை தடுக்க, அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரின்ஸ்:

இயற்கை வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், பல ஆண்டுகளாக, கற்பாறைகள், சிறு மலைகள் உடைக்கப்பட்டு, கற்கள், எம் - சாண்ட் மணல், கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.இதனால், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, கனிம வளங்கள் கிடைப்பதில்லை.

கனிமங்கள், 500 டன் எடையுள்ள டாரஸ் லாரிகளில் கடத்தப்படுகின்றன. இதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.கேரளாவில் கனிமவளம் அதிகம். அதை அவர்கள் எடுக்காமல், தமிழகத்தில் இருந்து எடுத்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் தொடர்ந்து இயற்கை வளத்தை அழித்தால், மழை பொய்த்து விடும். எனவே, இயற்கை வளங்களை காக்க, அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல; எந்த மாவட்டத்தில் இருந்தும் கனிமங்களை எடுத்து செல்ல தடை இல்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, தடுக்க முடியாத நிலையில் உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவனந்தபுரம் சாலையில், பெரிய லாரிகளில் கனிமங்கள் எடுத்து செல்லும் போது, சாலை பழுதடைகிறது.

எனவே, அங்குள்ள, 15 குவாரிகளில், 12ஐ அரசு மூடி விட்டது. துாத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து தான், கனிமங்கள் செல்கின்றன. எனினும், மாவட்ட எதிர்ப்பு காரணமாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

பிரின்ஸ்:

அரசு மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்புகின்றனர். மலையை உடைத்து விடலாம்; உருவாக்க முடியாது. இயற்கை வளத்தை நம் சந்ததியினருக்கு விட்டு செல்ல, மலைகளை உடைப்பதை தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கூறினாலும், அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, கனிமங்கள் எடுத்து செல்வதை தடுக்க முன் வருமா?

அமைச்சர் துரைமுருகன்:

மற்ற மாவட்டங்களில், பூமிக்கடியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில், பூமிக்கடியில் பாறைகள் இல்லை.வெளியில் உள்ள மலைகளை வெட்டி எடுக்கின்றனர். அதை தடுக்க, 12 குவாரிகளை மூடிவிட்டோம். துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து, கேரளாவிற்கு கற்களை எடுத்து செல்வதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. உங்கள் கவலையில் பங்கேற்கிறோம். உங்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X