அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
எஸ்.ஆர்.ராஜா, தி.மு.க., :- சிட்லப்பாக்கம் பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா?அமைச்சர் நேரு: செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளை, செம்பாக்கம் நகராட்சியுடன் ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஓசூர், துாத்துக்குடி, கோவை, நாகர்கோவில்

எஸ்.ஆர்.ராஜா, தி.மு.க., :

- சிட்லப்பாக்கம் பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா?

அமைச்சர் நேரு:

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளை, செம்பாக்கம் நகராட்சியுடன் ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, ஓசூர், துாத்துக்குடி, கோவை, நாகர்கோவில் மாநகராட்சிகள்; செங்கல்பட்டு நகராட்சி; நந்திவரம் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், குன்றத்துார், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், மாங்காடு என, ஏழு பேரூராட்சிகளில், 3,940 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப்பணி துவக்கப்படும்

எஸ்.ஆர்.ராஜா:

தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அரசு அறிவித்துள்ளது. கடந்த 2006ல் நான் வைத்த கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது; முதல்வருக்கு நன்றி. கடந்த 1996ல் பாதாள சாக்கடை திட்டம், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரத்தில் துவக்கப்பட்டது. தாம்பரத்தில் மட்டும்இன்னும் பணிகள் முடியவில்லை. துரிதமாக வளர்ந்து வரும் தாம்பரத்தில், பாதாள சாக்கடை பணிகளை, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

அமைச்சர் நேரு:

ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கப் பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. விரைந்து பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., துணை கொறடா ரவி: அரக்கோணம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விரிவாக்க பகுதிகளில், ஏழு தெருக்கள் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்டுள்ளன. அங்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு:

தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், இப்பிரச்னை உள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகள் விபரம் கணக்கெடுக்கப்படுகிறது.அவற்றில் விரைவில் பணி துவக்கப்படும். குடிநீர், கழிவு நீர் இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தி.மு.க., - கிரி:

செங்கம்பேரூராட்சி கழிவு நீர், செய்யாற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இதை தடுக்க, செங்கம் பேரூராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு:

ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-செப்-202107:22:18 IST Report Abuse
Bhaskaran ஆலந்தூர் திட்டம் என்று கொண்டுவந்து பலகோடிகள் சாப்பிட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X