சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆசிட்' வீச்சில் மனைவி பலி தலைமறைவு கணவன் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்:சேலத்தில் கணவரது 'ஆசிட்' வீச்சில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். தலைறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.சேலம், குகையைச் சேர்ந்தவர் இயேசுதாஸ், 50; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவரது மனைவி ரேவதி, 47; மூன்று மகன்கள் உள்ளனர். போதை பழக்கம்போதை பழக்கத்துக்கு அடிமையான இயேசுதாஸ், தினமும் ரேவதியிடம் சண்டையிடுவது வழக்கம். இதனால், கடந்த மே மாதம் ரேவதி, நாமக்கல்

சேலம்:சேலத்தில் கணவரது 'ஆசிட்' வீச்சில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். தலைறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், குகையைச் சேர்ந்தவர் இயேசுதாஸ், 50; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவரது மனைவி ரேவதி, 47; மூன்று மகன்கள் உள்ளனர்.

போதை பழக்கம்

போதை பழக்கத்துக்கு அடிமையான இயேசுதாஸ், தினமும் ரேவதியிடம் சண்டையிடுவது வழக்கம். இதனால், கடந்த மே மாதம் ரேவதி, நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.குடும்பம் நடத்த வரக் கோரி இயேசுதாஸ் மிரட்டியதால், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் ரேவதி புகார் அளித்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கோர்ட் மூலம் விவாகரத்து பெற்று கொள்வதாக, ரேவதி எழுதி கொடுத்தார்; 'ரேவதிக்கு தொந்தரவு தர மாட்டேன்' என இயேசுதாசும் எழுதி தந்தார்.

இதையடுத்து, தாய் ஆராயியுடன் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, மாலை 5:30 மணிக்கு ரேவதி சென்றார்.அப்போது பின் தொடர்ந்து வந்த இயேசு தாஸ், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மனைவி, மாமியார் மீது வீசி விட்டு தப்பினார்.அலறித் துடித்த இரண்டு பேரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த ரேவதி இறந்தார். ஆராயி லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.தப்பி ஓடிய இயேசுதாஸ், கரூரில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


அதிகபட்ச தண்டனை

இயேசுதாசுக்கு ஆசிட் கிடைத்தது எப்படி, அதை விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.அகில இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பு நிர்வாகிகள், நேற்று கலெக்டரிடம் வழங்கிய மனுவில், 'ரேவதியின் மூன்று மகன்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 'ஆசிட் வீசி கொலை செய்தவருக்கு, அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்' என, கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X