சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சைபர் கிரைம்' உதவியுடன் தகவல் திருட்டு கைதான போலீஸ்காரரின் 'தில்லுமுல்லு'

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:கார் டிரைவர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை போலீஸ்காரர், 'சைபர் கிரைம்' போலீஸ் உதவியுடன், மொபைல் போன் தகவல்களை திரட்டியது அம்பலமாகி உள்ளது.சிவகங்கையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். இவர் சில மாதங்களாக திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பினார்.பல்லடம் அருகே மூன்று கார்களில் வந்த

கோவை:கார் டிரைவர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை போலீஸ்காரர், 'சைபர் கிரைம்' போலீஸ் உதவியுடன், மொபைல் போன் தகவல்களை திரட்டியது அம்பலமாகி உள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். இவர் சில மாதங்களாக திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பினார்.பல்லடம் அருகே மூன்று கார்களில் வந்த நபர்கள் மகேஸ்வரனை கடத்தினர். போலீஸ் விசாரணையில், தங்கம் கடத்த லில் ஈடுபடும் கும்பல், முன்விரோதம் காரணமாக கடத்தி சென்றது தெரிந்தது.

விசாரணை நடத்திய போலீசார், கடத்தப்பட்ட மகேஸ்வரன் மற்றும் காரை மீட்டு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனரின் கார் டிரைவராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரன், 27, என்ற போலீஸ்காரரும் ஒருவர்.போலீஸ்காரர்

ராஜேஸ்வரன், 'சைபர் கிரைம்' போலீசார் சிலர் உதவி யுடன், மகேஸ்வரனின்மொபைல் போன் அழைப்பு விபரங்கள், இருப்பிடம் போன்ற தகவல்களை எடுத்து கொடுத்தது விசாரணையில் தெரிந்தது.இதை வைத்து தான், கடத்தல் கும்பல், திட்டம் தீட்டி கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.

'சைபர் கிரைம்' போலீசாரில் சிலர், பணத்துக்காக ரகசிய தகவல்களை கசியவிடுவது உறுதி யாகி உள்ளது. இவர்கள் யார் என்ற விசாரணை நடக்கிறது.

தகவலுக்கு ரூ.10 ஆயிரம்!

சைபர் கிரைம் போலீசில் பணியாற்றும் சிலர், மற்றவர்களின் மொபைல் போன் அழைப்பு விபரங்கள் போன்ற தகவல்களை திருட்டுத்தனமாக எடுத்து கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு பெறப்படும் தகவல்களை வைத்து கொலை, கடத்தல் போன்ற குற்றங்கள் நிகழ்கின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் ராஜேஸ்வரன், தங்க நகை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், நகை கடத்தல் கும்பலுக்கும் இதேபோன்று, தேவையான ரகசிய தகவல்களை எடுத்து கொடுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X