பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகள், அரசு அலுவலகம், பள்ளி ,கல்லூரிகளில் மழை நீர் சேகரம் கட்டாயப்படுத்தலாமே

Added : செப் 01, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் மழை நீர் சேகர அமைப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது.மாவட்டத்தில் குறைவான மழை பொழிவுவால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதுண்டு. பெய்கின்ற மழை நீரை சேகரம் செய்யப்படாமல்


அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் மழை நீர் சேகர அமைப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது.

மாவட்டத்தில் குறைவான மழை பொழிவுவால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதுண்டு. பெய்கின்ற மழை நீரை சேகரம் செய்யப்படாமல் வீணாகுவதை கருத்தில் கொண்டு தான் கடந்த 2001-2003 ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை தமிழகம் சந்தித்ததையடுத்து, மழைநீர் சேகர கட்டுமானம் அமைப்பதை அரசு கட்டாயமாக்கியது. மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினால் வறட்சி , வெள்ளச்சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என்ற நோக்கில் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.தற்போது வீடுகள், கட்டடங்கள், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு பராமரிக்கபடாமல் போனதால் நிலத்தடி நீர் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மழைநீர் சேகர கட்டமைப்பை அரசு கட்டாயமாக்கிய போதும், அவற்றை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் திட்டம் பயனற்று போய் விட்டது. கடமைக்கு கட்டமைப்பை உருவாக்கியதோடு அப்படியே விட்டு விட்டனர். இனியாவது அனைத்து ஊர்களிலும் மழை நீரை சேகரிப்பை கட்டாயமாக்க மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செயல்படுத்தினால் தான் தண்ணீர் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.

கட்டமைப்பு அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகர கட்டமைப்பு அவசியம் இருக்க வேண்டும். இவற்றை அடிக்கடி பராமரிக்கவும் வேண்டும். தேவைக்கு போக தண்ணீரை வீணாக்காமல் நிலம் , நீர்நிலைகளில் சென்று சேகரம் ஆகும்படி கட்டமைப்பை நிறுவ வேண்டும். அனைவரும் முனைப்பு , அக்கறையுடன் மழைநீர் கட்டமைப்பை உருவாக்கினால் தண்ணீர் மிகை மாவட்டமாக மாற்றி காட்டலாம்.டாக்டர் இளங்கோவன், சமூக ஆர்வலர் .............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X