அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சிகள் வார்டுகள் மறு வரையறை அரசு பரிசீலனையில் உள்ளதாக தகவல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - ராஜேந்திரன்: சேலம் நகராட்சி, 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதில், 60 வார்டுகள் உள்ளன. சில வார்டுகளில், 40 ஆயிரம் பேர் உள்ளனர்.கடந்த 27 ஆண்டுகளாக, வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்படவில்லை. மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில், வார்டுகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.அமைச்சர் நேரு:

சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தி.மு.க., - ராஜேந்திரன்:

சேலம் நகராட்சி, 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதில், 60 வார்டுகள் உள்ளன. சில வார்டுகளில், 40 ஆயிரம் பேர் உள்ளனர்.கடந்த 27 ஆண்டுகளாக, வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்படவில்லை. மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில், வார்டுகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

அமைச்சர் நேரு:

சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, வார்டு வரையறை முடிக்கப்பட்டு, 2018 டிச., 15ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, 60 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கைகள் வந்துள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2011ன் படி, சேலம் மாநகராட்சியின் மக்கள் தொகை, 8.29 லட்சம். தற்போது, 9.52 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோல, மாநிலம் முழுதும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டுகளை மறு வரையறை செய்ய கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, மக்கள் தொகை பெருக்கம் அடிப்படையிலும், கோரிக்கைகள் அடிப்படையிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மீண்டும் வார்டுகள் மறு வரையறை செய்வது, அரசின் பரிசீலனையில் உள்ளது.

மாநகராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில், வார்டுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தொகை, மூன்று லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், 52 வார்டுகள்; 9 லட்சத்துக்கு மேல் இருந்தால், 75 வார்டுகள் இருக்கலாம்; 60 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை இருந்தால், 200 வார்டுகள் வரை இருக்கலாம். இது ஆய்வில் உள்ளது. விரைவில், முடிவு செய்து அறிவிக்கப்படும்.

ராஜேந்திரன்:

மக்கள் தொகை, 9 லட்சத்திற்கு மேல் இருந்தால், 75 வார்டுகள் இருக்கலாம் என, அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 75 வார்டுகள் இருப்பது போல, மறு வரையறை செய்ய வேண்டும்.

அமைச்சர் நேரு:

அரசு ஆவன செய்யும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X