பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடிக்கு வரல சமையல் எண்ணெய்; செப். 1ல் உணவு என அறிவிக்கப்பட்டும் அசட்டை

Added : செப் 01, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அங்கன்வாடிகளில் இன்று முதல் மதிய உணவு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்த நிலையில்,மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இது வரை சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்படாத நிலையே உள்ளது.மாவட்டத்தில் 1504 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இன்று முதல் முன் பருவ கல்வி குழந்தைகளுக்கு சமைத்த சூடான மதிய உணவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அங்கன்வாடிகளில் இன்று முதல் மதிய உணவு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்த நிலையில்,மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இது வரை சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்படாத நிலையே உள்ளது.

மாவட்டத்தில் 1504 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இன்று முதல் முன் பருவ கல்வி குழந்தைகளுக்கு சமைத்த சூடான மதிய உணவு காலை 11.30 மணி முதல் 12:30 மணி வரை வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்த நிலையில், இதற்கான உணவு பொருட்கள் அந்தந்த அங்கன்வாடி மையங்களில் வந்திறங்கியது.

இதில் அரிசி, பருப்பு வந்துள்ள நிலையில் முக்கிய பொருளான சமையல் எண்ணெய் விருதுநகர், காரியாபட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் வரவில்லை. கலெக்டர் துவங்கி வைக்கும் அங்கன்வாடியில் மட்டும் தயார்நிலையில் இருக்க, மற்ற ஒரு சில இடங்களில் இல்லாமல் உள்ளது. ஊட்டச்சத்து திட்டத்தில் அலுவலர்கள் அசட்டையாக செயல்படுவது ,கலெக்டர் எடுக்கும் நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X