நிலக்கரி வாங்கியதில் ஊழல்: நடவடிக்கை எடுக்கப்படுமா? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி வாங்கியதில் ஊழல்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : செப் 01, 2021
Share
தி.மு.க., - கோவிந்தராஜன்: வடிவேலு ஒரு படத்தில், 'கிணற்றைக் காணவில்லை' என்பார்.அதுபோல், மின் வாரியத் துறை அமைச்சரும், பால்வளத் துறை அமைச்சரும், பொன்னேரியில் இருக்கக் கூடிய, வல்லுார் அனல் மின் நிலையத்தில் ஆய்வுக்கு சென்றனர்; நானும் சென்றிருந்தேன்.அங்கு ஆவணங்கள் சரியாக இருந்தன. ஆனால் 2.38 லட்சம் டன் நிலக்கரியை மட்டும் காணவில்லை.தரமற்ற நிலக்கரிகளை வாங்கி, தரமானது எனக் கூறி

தி.மு.க., - கோவிந்தராஜன்:

வடிவேலு ஒரு படத்தில், 'கிணற்றைக் காணவில்லை' என்பார்.அதுபோல், மின் வாரியத் துறை அமைச்சரும், பால்வளத் துறை அமைச்சரும், பொன்னேரியில் இருக்கக் கூடிய, வல்லுார் அனல் மின் நிலையத்தில் ஆய்வுக்கு சென்றனர்; நானும் சென்றிருந்தேன்.அங்கு ஆவணங்கள் சரியாக இருந்தன.

ஆனால் 2.38 லட்சம் டன் நிலக்கரியை மட்டும் காணவில்லை.தரமற்ற நிலக்கரிகளை வாங்கி, தரமானது எனக் கூறி ஊழல் செய்துள்ளனர். மின் அலகுகளை சரியாக ஓட விடாமல், நிர்வாக சீர்கேடு செய்து தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி உள்ளனர். இதிலும் ஊழல் நடந்துள்ளது.

ஊழல் செய்தோரைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல, எல்லாபுரம் ஒன்றியத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 38 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டது.பணி நடந்து கொண்டிருந்த போதே, வெள்ளத்தில் தடுப்பணை அடித்து செல்லப் பட்டது. பணி செய்தவர் சீரமைத்து தர வேண்டும்.

ஆனால் மீண்டும் 18 கோடி ரூபாய் செலவழித்து தடுப்பணை கட்டியுள்ளனர். அதை ஆய்வு செய்ய வேண்டும்.கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கு தமிழ்நாடு கழிவுப் பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது.அங்கு கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப் பட்டு உள்ளன. மருத்துவமனை கழிவுகளை இரவில் எரிக்கின்றனர்.

இதனால் 400 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகம் மாசு ஏற்பட்டுஉள்ளது. அந்த நிறுவனம் மற்றொரு அலகை அமைக்க உள்ளது. அதை ஆரம்பிக்காமல் இருக்க, முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்.சுறறுச்சூழல் பாதிப்பை குறைக்க, மக்கள் பிரதிநிதிகள், விவசாய, தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.கழிவு நீரை சாலையோரங்களில் விடுகின்றனர். இதை தடுக்க, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X