பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்பறை 'உயிர்' பெறுகிறது

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:இன்று, பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க காத்திருக்கின்றன, பள்ளி நிர்வாகங்கள். திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 'பளிச்'செனக் காட்சியளிக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில், 418 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 896 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகை புரிய
 வகுப்பறை 'உயிர்' பெறுகிறது

திருப்பூர்:இன்று, பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க காத்திருக்கின்றன, பள்ளி நிர்வாகங்கள். திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 'பளிச்'செனக் காட்சியளிக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில், 418 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 896 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகை புரிய உள்ளனர். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும், மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவ ரீதியாகவும், கல்வியியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வழங்கிய ஆலோசனைகள்:அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேசமயம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து ஏற்பாடுகளையும் எடுத்துள்ளோம். அனைவரும் முக கவசம் அணிதல் கட்டாயம்.நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்த்தல், கைகழுவும் இடத்திற்கு வழிகாட்டுதல், வகுப்பறைக்குள் நுழையும் முன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், ஒரு டெஸ்க்கிற்கு, 2 பேர் வீதம், வகுப்பிற்கு, 20 பேர் மட்டும் அமர வைத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.பள்ளி இடைவேளையின் போது மாணவர்களை கும்பலாக அனுப்பாமல், பல குழுக்களாக பிரித்து அனுப்பப்படுவர். மதிய உணவை சமூக இவைவெளியுடன் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்தளிக்க கூடாது. அவரவர் குடிநீர் பாட்டில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போதைக்கு பள்ளிகளில் விளையாட்டு நேரம் கிடையாது.பாதுகாப்புக்குஉத்தரவாதம்மாவட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், 14 ஆயிரத்து, 659 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில், 12 ஆயிரத்து, 197 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதி, 17 சதவீதம் பேர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்துள்ளனர்.இவர்கள் தடுப்பூசி போட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தொற்று அபாயம் இன்றி, மாணவர்களை தைரியமாக பள்ளிக்கு அனுப்பலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.கல்லுாரி மாணவர்கள் கவனத்திற்கு...இளங்கலை இரண்டாமாண்டு, இறுதியாண்டு, முதுநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. கேரளாவில் தொற்று தீவிரமடைந்து வருவதால், அம்மாநிலத்திலிருந்து கல்லுாரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X