பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் பொதுக்குழு கூட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.மாவட்ட தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் மரிய ஜேம்ஸ், முருகன், மாநில துணைத் தலைவர் பாலசந்திரன், துணை செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேக்கிழார் வரவேற்றார்.மாநில நிறுவன தலைவர் கருப்பையா

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

மாவட்ட தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் மரிய ஜேம்ஸ், முருகன், மாநில துணைத் தலைவர் பாலசந்திரன், துணை செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேக்கிழார் வரவேற்றார்.மாநில நிறுவன தலைவர் கருப்பையா பேசினார்.

கூட்டத்தில் செப். 11- ல் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தி, அன்னதானம் வழங்குவது என்றும், 27,614 பின்னடைவு பணியிடங்களை நிரப்புவது குறித்து கவர்னர் உரையில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநில கல்வி பிரிவு செயலாளர் ரவீந்திரன், மாவட்ட அமைப்பாளர் ராமநாதன், தலைமை நிலைய ஆய்வாளர் காளிதாஸ், மாவட்ட பொருளாளர் பாபு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X