வெளிநாட்டில் வேலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை

Added : செப் 01, 2021
Share
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 40 ஆண்டாக, பல்வேறு வெளிநாடுகளில் 10,350 க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்தியுள்ளது. ஓ.எம்.சி.எல்., நிறுவனம் ஆண்டுதோறும், 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வு பயிற்சி நடத்துகிறது. இதில் தேர்வாகும் செவிலியர் ஆண்டுக்கு 18 முதல் 24 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர் என அந்நிறுவனம்

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 40 ஆண்டாக, பல்வேறு வெளிநாடுகளில் 10,350 க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்தியுள்ளது. ஓ.எம்.சி.எல்., நிறுவனம் ஆண்டுதோறும், 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வு பயிற்சி நடத்துகிறது. இதில் தேர்வாகும் செவிலியர் ஆண்டுக்கு 18 முதல் 24 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.இதுபோல் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், பதிவு செய்யவும், இதன் வலை தளம், www.omcmanpower.com என்ற முகவரியில் அணுகலாம். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421 - 2999152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X