சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்,:பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் (பி.ஏ.பி.,) மொத்தம், 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றனவெள்ளகோவில் கிளை வாய்க்காலில் உள்ள, 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்க வேண்டிய அளவைவிட, குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி, கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின்

திருப்பூர்,:பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் (பி.ஏ.பி.,) மொத்தம், 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றனவெள்ளகோவில் கிளை வாய்க்காலில் உள்ள, 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்க வேண்டிய அளவைவிட, குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி, கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போது, 7 நாள் அடைப்பு, 7 நாள் திறப்பு எனும் நிலையில், 9 சுற்றுகள் வழங்க வேண்டிய நிலையில் இருந்து படிப்படியாக தண்ணீர் வழங் கும் நாட்களை குறைத்து விட்டனர். தற்போது, மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.மேலும், மேல் மடையில் தொடர் தண்ணீர் திருட்டு காரணமாக, கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகளிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், காங் கயத்தில் பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. விவசாயிகள் பங்கேற்றனர்.இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் கோபி, காங்கயம் செயற்பொறியாளர் அசோக் பாபு ஆகியோரை பாசன விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.தங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். குளறுபடிகளை களைந்து, தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X