அடிப்படை வசதியின்றி மக்கள் குமுறல் அரசு காக்குமா சிவகங்கை காமாட்சி நகர் மக்களை...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதியின்றி மக்கள் குமுறல் அரசு காக்குமா சிவகங்கை காமாட்சி நகர் மக்களை...

Added : செப் 01, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காமாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இக்குடியிருப்பில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆயுதப்படை மைதானம் அருகே வந்தவாசி ரோட்டில் வளர்ந்து வரும் நகராக உள்ளது.காமாட்சி நகர், முத்து நகர், பவுலா நகர், அழகுமெய்ஞானபுரம், மதுரை வீரன் நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கில்

சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காமாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது.

இக்குடியிருப்பில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆயுதப்படை மைதானம் அருகே வந்தவாசி ரோட்டில் வளர்ந்து வரும் நகராக உள்ளது.காமாட்சி நகர், முத்து நகர், பவுலா நகர், அழகுமெய்ஞானபுரம், மதுரை வீரன் நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் வசிக்கின்றனர். வளர்ந்து வரும் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட வாணியங்குடி ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை.

மக்கள் குடிநீர், தெருவிளக்கு, ரோடு வசதியின்றி தவிக்கின்றனர். இது குறித்து குடியிருப்போர் குரல் எழுப்பி வருகின்றனர்.காணாமல் போன ஊரணி கால்வாய்எம்.துரைராஜ், சங்க தலைவர், காமாட்சி நகர்: நகரில் உவர்ப்பு நீரை தான் வினியோகிக்கின்றனர். காமாட்சி ஊரணி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மூடிக்கிடக்கிறது. மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதியான ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மழை நீர் ஊரணிக்கு வராமல் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் ஊரணிக்கு வரும் வரத்து கால்வாய்களை துார்வாரி மழை நீர் தேங்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.முட்புதரில் வரத்து கால்வாய்பீ.குணசேகரன், சங்க நிர்வாகி, காமாட்சி நகர்: அல்லுார் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. மேலும் கால்வாய் துார்வாராமல் கிடப்பதால் கழிவு நீர் சாக்கடையாக தேங்கியுள்ளன. இதில் உருவாகும்

கொசுக்கள் மூலம் காமாட்சி நகர் மக்கள் மட்டுமின்றி ஆயுதப்படை குடியிருப்பு போலீசார் குடும்பமும் பாதிக்கப்படுகின்றன. எனவே அல்லுார் கண்மாய் செல்லும் வரத்து கால்வாயை துார்வாரி, முட்புதர்களை அகற்ற வேண்டும்.ரோடு வசதியின்றி அவதிஎன்.குமார், சங்க நிர்வாகி, காமாட்சி நகர்: இந்நகரில் முக்கிய தெருக்களில் கான்கிரீட், மெட்டல் சாலைகளே போடவில்லை. இதனால் மழை காலத்தில் நீர் தேங்கி ரோட்டில் செல்ல முடியாத நிலைக்கு சகதியாக காட்சி அளிக்கும்.

மேலும் அந்தந்த பகுதியில் சாலை வசதியின்றி பள்ளங்கள் தோண்டி போட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் இரவில் விபத்தில் சிக்குகின்றனர்.தெருவிளக்கின்றி திருடர் அச்சம்எஸ்.பூமாதேவி, மகளிரணி நிர்வாகி, காமாட்சி நகர்: இந்நகரில் குடியிருப்புகள் அதிகரித்து 10 ஆண்டுக்கும் மேலாகிறது. ஆனால் இது வரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்கு வசதிகளை முழுமையாக செய்து தரவில்லை.

இரவில் தெருவிளக்கு வெளிச்சமின்றி விஷஜந்துக்களின் அச்சத்தில் பெண்கள் தவிக்கின்றனர். குறிப்பாக இரவில் வழிப்பறி திருடர்களின் அச்சமும் அதிகரித்துள்ளன. ஊராட்சி நிர்வாகம் இந்நகருக்கு போதிய தெருவிளக்கு வசதிகளை செய்துதர வேண்டும்.குடிநீர் குழாய் அவசியம்எம்.ஐஸ்வர்யா, மகளிரணி நிர்வாகி, காமாட்சி நகர்: இந்நகர் மக்களுக்கு காமாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள மேல்நிலை தொட்டி மூலம் உவர்ப்பு நீர்தான் சப்ளை செய்கின்றனர். அதுவும் 4 தெருக்குழாய்கள் மட்டுமே உள்ளன. ஊராட்சி நிர்வாகம் அனைத்து தெருக்களிலும் பொது குழாய்களை பொருத்தி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X