பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் விழாவில் விதிமீறல் அதிகாரிகள் எச்சரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கண்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. வருவாய்துறையினர், போலீசார் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.பட்டணம்காத்தான் கண்ணன்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில்வழிபாடு நடந்தது.

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கண்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.

வருவாய்துறையினர், போலீசார் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.பட்டணம்காத்தான் கண்ணன்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில்வழிபாடு நடந்தது. அன்னதானத்தில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் வந்தனர்.

இதுகுறித்த புகாரில் கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு குழு மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதர், எஸ்.ஐ., சித்ரவேலு குழுவினர் விழாவில் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடியதை கண்டித்தனர்.இனிவரும் நாட்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி மருந்துதெளித்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொற்றுநோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X