பொது செய்தி

தமிழ்நாடு

கேரள--தமிழக நீர்ப்பாசன பிரச்னை ஒப்பந்தத்தை தி.மு.க., தொடர வேண்டும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது,ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1624 ஏரிகளில் கருவேலமரங்கள் மண்டிக்கிடக்கிறது. ராமநாதபுரம், சிவகங்கையில் கடைக்கோடி கண்மாய் வரை கருவேல மரங்கள்அடர்ந்து உள்ளன. இதனை சீர் செய்ய அரசு ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும்.2020-21ல் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

பரமக்குடி : பரமக்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது,ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1624 ஏரிகளில் கருவேலமரங்கள் மண்டிக்கிடக்கிறது.

ராமநாதபுரம், சிவகங்கையில் கடைக்கோடி கண்மாய் வரை கருவேல மரங்கள்அடர்ந்து உள்ளன. இதனை சீர் செய்ய அரசு ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும்.2020-21ல் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. 2016 முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் காப்பீடு விஷயத்தில் முறைகேடு நடக்கிறது.காவிரி பிரச்னையில்தமிழக, கர்நாடகம் இடையே நல்லுறவு ஏற்படமுதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக முதல்வரை சந்தித்து மேகதாது அணை விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவளிக்க கோரிக்கை வைத்தோம்.அ.தி.மு.க., ஆட்சியில் நீர்ப்பாசன விஷயத்தில் இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு தவிர்த்து மற்ற நீர் திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியில் முன்பு போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X