சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபசார தொழிலில் நடந்த தகராறு புரோக்கர் கொலையில் நால்வர் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:பெண்ணிடம் உல்லாசம்அனுபவிப்பதில் ஏற்பட்ட தகராறில், கோவை புரோக்கரை கொலை செய்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.லாட்ஜ் அறைகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லெனட் பிராங்க்ளின், 39. கடந்த 28ம் தேதி, தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு லாட்ஜ் அறையில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். மருத்துவக் கல்லுாரி

தஞ்சாவூர்:பெண்ணிடம் உல்லாசம்அனுபவிப்பதில் ஏற்பட்ட தகராறில், கோவை புரோக்கரை கொலை செய்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


லாட்ஜ் அறை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லெனட் பிராங்க்ளின், 39. கடந்த 28ம் தேதி, தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒரு லாட்ஜ் அறையில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். மருத்துவக் கல்லுாரி போலீசார் விசாரித்தனர்.பிராங்க்ளின் எலக்ட்ரிக்கல் பொருட்கள் 'சப்ளை' செய்து வந்துள்ளார். தொழில் நிமித்தமாக, தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், விபசார கும்பல் ஒன்றுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, விபசார புரோக்கராக தொழிலை மாற்றிக் கொண்டார்.தஞ்சையில், தான் தங்கியிருந்த லாட்ஜ் அறைக்கு எதிரே, பாலியல் தொழிலுக்காக பெண் ஒருவரை தங்க வைத்து, விபசாரம் செய்து வந்துள்ளார். 28ம் தேதி அங்கு போதையில் வந்த நான்கு இளைஞர்கள், பெண்ணிடம் யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக, பிராங்க்ளினிடம் தகராறு செய்துள்ளனர்.

இதில் நான்கு இளைஞர்களும் தாக்கி கீழே தள்ளியதில், தலையின் பின்புறம் சுவரில் மோதி பிராங்க்ளின் இறந்தார்.அதன்பின், நான்கு பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். அங்கிருந்த பெண்ணும் தப்பியோடினார்.


'சிசிடிவி' காட்சிகள்'

சத்தம் கேட்டு லாட்ஜ் வாட்ச்மேன்' சென்று பார்த்தபோது, பிராங்க்ளின் இறந்து கிடந்தார். அவரது புகார்படி, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கொலையில் ஈடுபட்டது, தஞ்சாவூரைச் சேர்ந்த தினகரன், 22, முகமது அஸன் காதர், 24, பிரவீன் குமார், 18, அருண் லிவிங்ஷ்டன், 23, என்பது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X