அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நிலம் எடுப்பு பணிக்கு தனி அமைப்பு'

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:''நிலம் எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீட்டை விரைவாக வழங்குவதை உறுதி செய்யவும், மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:*திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்,

சென்னை:''நிலம் எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீட்டை விரைவாக வழங்குவதை உறுதி செய்யவும், மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:

*திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், லிப்ட் வசதியுடன், பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மற்றும் அலுவலக கட்டடங்கள், 12.50 கோடி ரூபாய்; விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம், 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்

* மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள், 8.22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்

* சேலம் - தலைவாசல்; மயிலாடுதுறை; தஞ்சாவூர் - ஒரத்தநாடு; அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில், புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள்.திருவையாறு, கும்மிடிபூண்டி, விக்கிரவாண்டி, வலங்கைமான், அறந்தாங்கி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில், புதிய வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள், 26.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்

* விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் முகாம் நடத்தப்பட்டு, 2022 பொங்கல் பண்டிகைக்குள் கிராம மக்கள் பயன்பெற வழிவகை செய்யப்படும்

* மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை பலப்படுத்தும் வகையில், 14 வட்டாட்சியர் பணியிடங்கள், துணை ஆட்சியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்

* பேரிடர் மேலாண்மையில், மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில், 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்

* நிலம் எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்குவதை உறுதி செய்யவும், மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்

* அரசு மற்றும் தனியார் கல்வி, தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், அரசு நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கான தற்போதைய நடைமுறையை எளிமைப்படுத்தி, நிலப்பரிமாற்ற குழு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X