காங்கயத்தில் கணவன் கொலை மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:காங்கயத்தில், கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காங்கயம், ஆலம்பாடியை சேர்ந்தவர் மனோகரன்; மனைவி ராதாமணி. 11 வயதில் மகன் உள்ளார். தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த, 2016ல் குன்னாங்கல் பகுதியில் மனோகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.காங்கயம் போலீசார் நடத்திய விசாரணையில், ராதாமணிக்கு,

திருப்பூர்:காங்கயத்தில், கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காங்கயம், ஆலம்பாடியை சேர்ந்தவர் மனோகரன்; மனைவி ராதாமணி. 11 வயதில் மகன் உள்ளார். தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த, 2016ல் குன்னாங்கல் பகுதியில் மனோகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.காங்கயம் போலீசார் நடத்திய விசாரணையில், ராதாமணிக்கு, அப்பகுதியை சேர்ந்த டிரைவர் சேகர் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.இருவரின் சந்திப்புக்கு இடையூறாக இருந்ததால், மனைவி ராதாமணி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரும்பி கம்பியால் தாக்கி மனோகரனை கொலை செய்தது தெரிய வந்தது.இந்த வழக்கை விசாரித்த தாராபுரம் கூடுதல் கோர்ட் நீதிபதி குமார் சரவணன், நேற்று ராதாமணி, சேகர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X