அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடியில் புதிய தொழிற்பூங்கா'

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:''திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில், 576 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:*விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில், 250 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த ஆடை பூங்கா

சென்னை:''திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில், 576 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:

*விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில், 250 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த ஆடை பூங்கா அமைக்கப்படும்

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் தொழிற் பூங்காவில், 300 கோடி ரூபாய் மதிப்பில், நாட்டிலேயே முதன் முறையாக, 'ப்யூச்சர் மொபிலிட்டி பார்க்' உருவாக்கப்படும்

* திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 576 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்

*சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகள், 100 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கப்படும்

*சிறுசேரி மற்றும் பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காக்களில், 70 கோடி ரூபாய் மதிப்பில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்

*கரூர் மாவட்டத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

*சென்னையில் ரேடியோ அதிர்வலை மற்றும் ஆன்டெனா தொழில்களுக்கான பொது சோதனை வசதி மையமும், உளுந்துார்பேட்டையில், ட்ரோன் தொழிலுக்கான பொது சோதனை வசதியும், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

*விமானம் மற்றும் பாதுகாப்பு துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, திருத்தப்பட்ட தமிழ்நாடு விமானம் மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியிடப்படும்

*ஏற்றுமதி தொடர்பான அனுமதியை உடனடியாக பெற்று தர, ஏற்றுமதிக்கான சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்

*மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும், உபயோகத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தேவைகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட மின் வாகன கொள்கை வெளியிடப்படும்

*தமிழ்நாடு சிமென்ட் நிறுவனமும், சிப்காட் நிறுவனமும் இணைந்து, 45 கோடி ரூபாய் மதிப்பில், ஆலங்குளத்தில், 10 மெகாவாட் திறன் உடைய சோலார் மின்சக்தி ஆலை நிறுவப்படும்

* உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்

*செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 5.90 கோடி ரூபாய் மதிப்பில் உப்பு உற்பத்தி துவக்கப்படும். தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கும் உப்பு மற்றும் உப்பு துாள், 'நெய்தல்' என்ற புதிய பெயரில் விற்கப்படும்இவ்வாறு தங்கம் தென்னரசு அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X