அரசியல் செய்தி

தமிழ்நாடு

436 குவாரிகளில் மழை நீர் சேகரிப்பு கோடையை சமாளிக்க புதிய திட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
''திருநெல்வேலி, கன்னியாகுமரி கடற்கரைகளில் கிடைக்கும் தாது மணலை விற்பனை செய்யும் நிலை வந்தால், 'டாமின்' லாபத்தில் இயங்கும்,'' என, நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.அவரது பதிலுரை:கனிம வளத்துறையை பொறுத்தவரை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, 'டாமின், டான்மேக்' ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. நஷ்டம்இதில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை,

''திருநெல்வேலி, கன்னியாகுமரி கடற்கரைகளில் கிடைக்கும் தாது மணலை விற்பனை செய்யும் நிலை வந்தால், 'டாமின்' லாபத்தில் இயங்கும்,'' என, நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அவரது பதிலுரை:கனிம வளத்துறையை பொறுத்தவரை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, 'டாமின், டான்மேக்' ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. நஷ்டம்இதில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை, 2016 - 17ம் ஆண்டு, 1,444 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கியது. இன்று, 972 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது.

'டாமின்' நிறுவனம், 28 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. இது, ஒரு காலத்தில் ஒஹோவென்று இருந்தது. இப்போது, நிலத்தை விற்று, சம்பளம் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டது. 'டான்மேக்' சிறிய தொழிற்சாலை; அதுவும் நஷ்டத்தில் உள்ளது. இவற்றை, அரசு துறைகளாக நான் பார்க்கவில்லை; தனியார் நிறுவனத்தை போல பார்க்கிறேன்.

இந்த நிறுவனங்களை லாபத்தில் இயக்கி காட்டுவோம். 'மணல் விற்பனையில், அரசு தான் ஈடுபட வேண்டும்' என்று, நீதிபதி கூறியுள்ளார். எனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி கடற்கரைகளில் கிடைக்கும் தாது மணலை எடுத்து, விற்பனை செய்யும் நிலை வந்தால், 'டாமின்' லாபத்தில் இயங்கும்.

மாநிலத்தில் உள்ள, 436 பயனற்ற குவாரிகளை, குடிநீர் வடிகால் வாரியம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அதில் மழை நீரை சேமித்து, கோடை காலங்களில் பயன்படும் வகையில் உபயோகப்படுத்தப்படும்.விதிமுறைகளுக்கு புறம்பாக, கனிம வளங்கள் எடுப்பதை தடுக்க, 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும், 25 கோடி ரூபாய் செலவிடப்படும்.

கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள, பிராமி கல்வெட்டுகள், புதுக்கோட்டை, சித்தன்னவாசலில் உள்ள குடைவரை கோவில்கள் மற்றும் ஓவியங்கள், மதுரையில் உள்ள சமணர் படுகைகளை பாதுகாக்கும் வகையில், இவை அமைந்துள்ள பகுதியில் இருந்து, 500 மீட்டர் சுற்றளவிற்கு சுரங்கப் பணிகள் தடை செய்யப்படும்.


கிரானைட் கழிவு

தரமற்ற, 'எம் - சாண்ட்' சந்தைகளில் விற்பனை செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும், அவற்றின் தயாரிப்பு, தரம், விலையை வரைமுறைப்படுத்த, மாநில அளவில் கொள்கை உருவாக்கப்படும்.குவாரிகளில் மலைபோல குவிந்து கிடக்கும், கிரானைட் கழிவு கற்களை விற்பனை செய்து, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X