அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் கொலுசு பூங்கா: பா.ம.க., வலியுறுத்தல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பா.ம.க., - அருள்: முதியோர் உதவித் தொகையை, குழந்தைகள் இருந்தாலும், ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு வழங்க வேண்டும். சேலம் மாநகராட்சியில், தினசரி சேகரிக்கப்படும், 350 டன் குப்பையை, ஏற்காடு மலை அடிவாரத்தில் கொட்டுகின்றனர்.அப்பகுதியில், 'மேக்னசைட்' உள்ளது. பாலிதீன் குப்பையை கொட்டுவதால், அவை சூடாகி, அடிக்கடி தீப்பிடிக்கின்றன. எனவே, குப்பை கொட்டு வதை தடுத்து, நிரந்தர தீர்வு காண

பா.ம.க., - அருள்:

முதியோர் உதவித் தொகையை, குழந்தைகள் இருந்தாலும், ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு வழங்க வேண்டும். சேலம் மாநகராட்சியில், தினசரி சேகரிக்கப்படும், 350 டன் குப்பையை, ஏற்காடு மலை அடிவாரத்தில் கொட்டுகின்றனர்.அப்பகுதியில், 'மேக்னசைட்' உள்ளது. பாலிதீன் குப்பையை கொட்டுவதால், அவை சூடாகி, அடிக்கடி தீப்பிடிக்கின்றன. எனவே, குப்பை கொட்டு வதை தடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சேலம் வெள்ளி கொலுசு மிகவும் பிரபலமானது. அதற்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர வேண்டும். கொலுசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். வெள்ளி கொலுசு தொழில் பூங்கா அமைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரிகளில், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

தமிழ் கட்டாய பாடமொழி சட்டம், 2006ல் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் தமிழ் படிக்காமல், ஒரு தலைமுறை, மேல் படிப்புக்கு செல்லும் அவலம் இருந்தது. அதை மாற்ற, தமிழை ஒரு பாடமொழியாக படிக்க, கருணாநிதி சட்டம் இயற்றினார்.

அருள்:

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், விருப்பப் பாடமாக, வேறு மொழி பாடங்களை எடுக்கின்றனர். நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும். முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க வில்லை. ஜவ்வரிசி மாவுக்கு பதிலாக, பல்வேறு மாவுகளை கலப்படம் செய்கின்றனர்.

அமைச்சர்அன்பரசன்:

ஜவ்வரிசியில் கலப்படம், கடந்த ஆட்சியில் நடந்தது. தற்போது கடுமையான ஆய்வுகள் செய்யப்பட்டு, நிறைய நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X