வன சுற்றுலா தலம் இன்று முதல் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன சுற்றுலா தலம் இன்று முதல் அனுமதி

Added : செப் 01, 2021
Share
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச் சுற்றுலா தலங்களுக்கு இன்று (செப்.1) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி யளித்துள்ளது. கொரோனா 2ம் அலை பாதிப்பால் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நான்கு மாதத்திற்கு முன் மூடப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம்,

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச் சுற்றுலா தலங்களுக்கு இன்று (செப்.1) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி யளித்துள்ளது.

கொரோனா 2ம் அலை பாதிப்பால் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நான்கு மாதத்திற்கு முன் மூடப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக் ஆகியவற்றை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியளிக்கப்படுகிறது என, ரேஞ்சர் செந்தில்குமார் கூறினார். இங்கு வருவோர் அரசு வழிகாட்டுதலின்படி வழிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X