அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 01, 2021
Share
சிவகங்கை : அண்ணாமலை பல்கலையுடன் மறைந்த முதல்வர் ஜெ., பல்கலையை இணைக்கும் சட்ட மசோதாவை கண்டித்து மாவட்ட அளவில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கையில் நகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர்.,இளைஞரணி மாநில துணை தலைவர் கருணாகரன், நகர் அவை தலைவர் பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் இளங்கோ உட்பட மாவட்ட,

சிவகங்கை : அண்ணாமலை பல்கலையுடன் மறைந்த முதல்வர் ஜெ., பல்கலையை இணைக்கும் சட்ட மசோதாவை கண்டித்து மாவட்ட அளவில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கையில் நகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர்.,இளைஞரணி மாநில துணை தலைவர் கருணாகரன், நகர் அவை தலைவர் பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் இளங்கோ உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.மானாமதுரையில் அ.தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன்,ஜெயப்பிரகாஷ், நகர செயலாளர் விஜிபோஸ் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடலில், ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன்,ஜெகதீஸ்வரன், கோபி,ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்புத்துாரில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் இப்றாம்சா, ஒன்றிய செயலாளர் வடிவேலு, ஜெ.பேரவை முருகேசன், நேரு, வக்கீல் பிரிவு அழகர்சாமி, நகர் அவைத்தலைவர் புரட்சி மணி, முன்னாள் நகர் செயலாளர் சக்திவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேவகோட்டைதேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுந்தரலிங்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், இணை செயலாளர் முருகன், நகர ஜெ.பேரவை செயலாளர் தனசேகரன், மாவட்ட ஜெ.பேரவை கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் முருகன், நடராஜன், முன்னாள் அரசு அலுவலர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X