அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பணிகளுக்கு அவசியம் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
''அரசு திட்டங்களை செயல்படுத்த, நிறைய நிலம் தேவைப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.அவரது பதிலுரை:அ.தி.மு.க., ஆட்சியில், 'அம்மா திட்டம்' என்ற பெயரில், மக்கள் அலைக்கழிக்க பட்டனர். பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாரந்தோறும் திங்கள்

''அரசு திட்டங்களை செயல்படுத்த, நிறைய நிலம் தேவைப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

அவரது பதிலுரை:அ.தி.மு.க., ஆட்சியில், 'அம்மா திட்டம்' என்ற பெயரில், மக்கள் அலைக்கழிக்க பட்டனர். பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாரந்தோறும் திங்கள் கிழமை, அப்பணிகளை மட்டுமே மேற்கொள்ள, தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நடவடிக்கை

எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம் இலவச பட்டாக்களை கொடுக்க, மாவட்ட கலெக்டர்களிடம் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில், விவசாய தொழிலாளர்களுக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை கருணாநிதி கொடுத்தார். அப்போது, 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கூறினர். ஆனால், இரண்டு லட்சம் ஏக்கர்கள் தான் இருந்தன. அதைத் தான் பிரித்து கொடுத்தார்.

வருவாய் துறையில், சர்வேயர்கள், 4,000 பேர் இருக்க வேண்டும்; 2,000 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், நிலத்தை அளவீடு செய்ய பணம் கட்டினால், இரண்டு மாதம் ஆனாலும், சர்வேயர்கள் வருவதில்லை. கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதனால், இந்த மூன்று மாதங்களில், நிர்வாகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பேரிடர் மேலாண்மையை பொறுத்தவரை, மழை, வெள்ளம் வந்த பின், ஓடும் வேலை இருக்கக் கூடாது என்று, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால், எங்கே மழை வரும்; அங்கு வேறு எப்போது மழை பாதிப்பு வந்தது என, ஐந்தாண்டு கணக்கை பார்த்து, நிலையை முன்கூட்டியே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருவாய், புள்ளியியல், வேளாண்மை துறைகள் இணைந்து, பயிர் அறுவடை ஆய்வை மேற்கொள்கின்றன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதற்கு, ஒராண்டு ஆகிறது. இரண்டே மாதங்களில், பயிர் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டியல்மாநிலம் முழுதும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன.

குறிப்பாக, சென்னையில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. அரசு திட்டங்களை செயல்படுத்த, நிறைய நிலங்கள் தேவை. எனவே, அவற்றை கையகப்படுத்த, கலெக்டர்களுக்கு உத்தர விட பட்டு உள்ளது. இதற்காக, எங்கெங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன; எந்த வகையிலான ஆக்கிரமிப்பு என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மூன்று மாதங்களில், 85 ஆயிரம் பேருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X