குறைகிறது வைகை நீர்மட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைகிறது வைகை நீர்மட்டம்

Added : செப் 01, 2021
Share
ஆண்டிபட்டி:நீர்வரத்து குறைந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் குறைகிறது.வைகை அணை நீர்மட்டம் ஆக.11ல் 68 அடியாக இருந்தபோது பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வருஷநாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு மூலம் அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணை

ஆண்டிபட்டி:நீர்வரத்து குறைந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் குறைகிறது.

வைகை அணை நீர்மட்டம் ஆக.11ல் 68 அடியாக இருந்தபோது பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வருஷநாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு மூலம் அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணை நீர் மட்டும் வைகை அணைக்கு வருகிறது.

கடந்த சில வாரமாக நீர் தொடர்ந்து வெளியேறுவதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 64.16 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 971 கனஅடியாகவும், அணையில் இருந்து கால்வாய் வழியாக 1900 கனஅடி, மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்கு வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X