அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு கொரோனா காலத்திலும் கிடைத்தது

Added : செப் 01, 2021
Share
Advertisement
''கொரோனாவால் நாடு முடங்கி இருந்த நான்கு மாதங்களில், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள், தமிழகத்திற்கு வந்துள்ளன,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.அவரது பதிலுரை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழகத்தின் பங்கு, 9.84 சதவீதமாக உள்ளது. நாட்டின், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, தமிழகம் உள்ளது. ஏற்றுமதியில், மூன்றாவது இடத்திலும், அன்னிய நேரடி

''கொரோனாவால் நாடு முடங்கி இருந்த நான்கு மாதங்களில், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள், தமிழகத்திற்கு வந்துள்ளன,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அவரது பதிலுரை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழகத்தின் பங்கு, 9.84 சதவீதமாக உள்ளது. நாட்டின், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, தமிழகம் உள்ளது. ஏற்றுமதியில், மூன்றாவது இடத்திலும், அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈட்டும் மாநிலங்களில், முதல் ஐந்து இடத்திலும் தமிழகம் உள்ளது.

நாட்டில் ஏழு இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தர்மபுரி, விருதுநகரில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது; மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

கொரோனா காலத்தில், தொழிற்சாலைகள் பாதிப்பு இல்லாமல் இயங்கவும், ஏற்றுமதி நடக்கவும் அக்கறை எடுக்கப்பட்டது. இதனால், நாடு முடங்கி இருந்த நேரத்தில், நான்கு மாதங்களில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இந்த முதலீடுகளை, மாநிலம் முழுதும் சமச்சீராக அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2015ல் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 திட்டங்களும், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளும் வந்துள்ளதாகவும், அதன் வாயிலாக 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 64 திட்டங்கள் வாயிலாக 65 ஆயிரத்து, 480 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது. இவற்றால் 1.80 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அப்போது, மின் வாரியம் வாயிலாக 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில், இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை துவங்கியுள்ளன. இதில், 11 திட்டங்கள் கைவிடப் பட்டு உள்ளன. இதனால் 64 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் முதலீடு கிடைக்காமல் போய் விட்டது. இதை தொடர்ந்து, 2019ல், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக 304 திட்டங்களும், 3.5 லட்சம் கோடி முதலீடுகளும், 10.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், 150 நிறுவனங்கள் வாயிலாக 80 ஆயிரத்து, 612 கோடி ரூபாய் முதலீடு தான் கிடைத்து உள்ளது. இதன் வாயிலாக, 2.69 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். செம்மொழி நிறுவனம் வாயிலாக, பல திட்டங்களையும் ஆய்வுகளையும் செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

10 ஆண்டுகளாக வழங்கப்படாத, 'கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்பட உள்ளது. அரசின் அலுவல் மொழியாக, தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். தேசிய வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவகலங்களில் இணை மொழியாக, தமிழ் இருக்க வேண்டும். இதற்காக, அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள, அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X