சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கடத்தல்; கூலிப்படைக்கு வலை

Added : செப் 01, 2021
Share
Advertisement
பல்லடம்:கடந்த ஆக., 27 அன்று, பல்லடம் அடுத்த பெரும்பாளி அருகே, மகேஸ்வரன் என்பவர் கூலிப் படையினரால் கடத்தப்பட்டார்.எஸ்.பி., ெசஷாங் சாய் உத்தரவின் பேரில், ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம், மகேஸ்வரன் வேலை பார்த்ததும்; பரிமாற்றத்தின்போது ஏற்பட்ட பிரச்னை

பல்லடம்:கடந்த ஆக., 27 அன்று, பல்லடம் அடுத்த பெரும்பாளி அருகே, மகேஸ்வரன் என்பவர் கூலிப் படையினரால் கடத்தப்பட்டார்.எஸ்.பி., ெசஷாங் சாய் உத்தரவின் பேரில், ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம், மகேஸ்வரன் வேலை பார்த்ததும்; பரிமாற்றத்தின்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மகேஸ்வரன் கடத்தப்பட்ட விவரமும் விசாரணையில் தெரியவந்தது.மகேஸ்வரன் கடத்தப்பட்ட வழக்கில், யாசர் அராபத் 34, முஹம்மது ரிஸ்வான் 31, கார்த்திக் 39, சர்குணம் 48, முகமது சல்மான் 43, ரகு 30, மற்றும் கோவை மாநகர போலீஸ் ராஜேஸ்வரன், 27 ஆகிய, 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடத்தலுக்காக அவர்கள் பயன்படுத்திய மூன்று கார்களும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போலீசார் கூறுகையில், ''கூலிப்படையை சேர்ந்த, 4 பேரை தேடி வருகிறோம். தனிப்படை போலீசார், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.ஆள் கடத்தல் வழக்குதான் விசாரிக்கப்படுகிறது; தங்க கடத்தல் தொடர்பான விசாரணை துவங்கப்படவில்லை.'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X